கோப்பியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் பலருக்கு கோப்பி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க கோப்பி பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள். கோப்பியில் உள்ள கொபீன்', உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் கோப்பியில் உள்ள கொபீன்' அல்ல, கோப்பியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகிறார்கள். அதாவது, கொபீன்', உஷார்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் படபடப்பையும், உயர் இரத்த அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்கிறார்கள்.இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்கமாகக் காலையில் கோப்பி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அது இல்லாமலே சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்கிறார். எங்கள் ஆய்வின்படி, கோப்பி பருகுவதால் பலன் ஏதும் இல்லை. அதனால் நாம் உஷார்தன்மை பெற்றதைப் போல உணர்ந்தாலும், கொபீன்' பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதேநேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது'' என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.
Thanks To......Mangayarkesari
