இன்ரர்
நெட்டில் பொருட்களை விற்கிறார்கள், வாங்குகிறார்கள் ! பங்குச் சந்தை
உண்டு, ! ஆனால் இப்ப நீங்கள் இங்கே வாசிக்க இருப்பது ஒரு புது பிசினஸ்
அதுவும் வெற்றிகரமாக நடக்கும் பிசினஸ் ! கோடி கோடியா கொட்டும் ! சரி இப்படி
எல்லாம் சொல்லி உங்களைக் குழப்ப நாம் விரும்பவில்லை வாருங்கள் நேரடியாகவே
மேட்டருக்குள் போய்விடலாம்.
லண்டனில் ஒரு இளைஞன், தனது காதலியுடன் சுமார் 1 வருடங்களாகக்
கதைத்திருக்கிறான். அவனுக்கு விசா இல்லை. இருந்தாலும் கள்ளமாக என்றாலும்
வேலைசெய்து காதலிக்கு பணத்தை அனுப்புகிறான். நிதம் அவனுக்கு வரும் தொலைபேசி
அழைப்பு, அதில் வரும்செய்தி எல்லாம் பணம்வேண்டும் என்பதுதான். ஊரில் காதலை
வளர்த்துக்கொண்டு லண்டன் வந்தவர் அல்ல இந்த இளைஞன். சந்தர்ப்ப வசத்தால்
பேஸ் புக் மூலம் காதல் மலர்ந்திருக்கிறது. காதலியும் தனது படத்தை ஈமெயில்
மூலம் அனுப்ப, அப்படத்தைப் பார்த்த இந்த இளைஞன் பூரித்துப் போனான்.
இவ்வளவு அழகான பெண்ணுக்கு காசு அனுப்பாமல் வேறு யாருக்கு அனுப்புவார்கள்
என்றபடி நாட்கள் ஓடுகிறது...
லண்டனில் இருந்து எனக்கு வெறுத்துவிட்டது, நான் கொழும்புக்கு வந்து
உன்னைக் கலியாணம் கட்டப்போகிறேன் என்று எப்ப அந்த இளைஞன் ஒரு வார்த்தையை
விட்டானோ அன்றே எல்லாம் தலைகீழ் ! மறு நாள் போன் அடிக்கும்போது அந்தப் பெண்
சொல்கிறாள், உங்களிடம் நான் ஒரு விடையத்தை மறைத்துவிட்டேன் என்று ! அது
என்ன தெரியுமா ? எனக்கு கான்சர். அதுவும் சும்மா கான்சர் இல்லை... இரத்தப்
புற்றுநோய் ! இந்த இளைஞரும் அவள் சொல்வதை எல்லாம் நம்பி, அவள்
சாகப்போகிறாள் என்று தாடி வளர்த்து அலையத் தொடங்கியுள்ளார். இந்தவேளை ஒரு
Medical offer வந்திருக்கு! அதாவது இந்தியா சென்று அப்பலோவில் சிகிச்சை
எடுத்தால் சிலவேளை குணமாகலாம். இல்லை எண்டால் கொஞ்ச நாளில் பெண் செத்து
விடுவாள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனே படாத பாடு பட்டு, இந்த இளைஞனும் பணத்தை லண்டனில் புரட்டி அனுப்ப,
தான் இந்தியா செல்வதாக அப் பெண் கூறியுள்ளார். சில வாரங்களில் இந்தியவில்
இருந்து போன் அடித்த ஒரு நபர், உங்கள் காதலி தற்போது கோமா நிலையில் உள்ளார்
எனக்கூறியுள்ளார்.
பின்னர் ஒரு கிழமையில் போன் அடித்து காதலி இறந்துவிட்டாள். 31
நாட்களுக்குப் பின்னர் 31ம் நாள் நினைவஞ்சலிப் படத்தோடு அவள் புகைப்படம்
யாழ் உதயன் பத்திரிகையில் வருகிறது.
அதனையும் பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்கள் அப் பெண்ணின் தாய்
தந்தையர். இதில் இறந்ததாகச் சொல்லப்படும் பெண்ணுக்கு 2 சகோதரிகள் வேறு
இருக்கிறார்கள்.என்று சொல்லி இருக்கிறார்கள்.
பெற்றோர் பேப்பரில் கொடுத்த 31ம் நாள் நினைவுப் படத்துக்கும், நண்பர்கள்
என்று சொல்லிச் சிலர் தாம் கொடுத்த பிறிதொரு 31ம் நாள் நினைவஞ்சலிப்
படத்துக்கும் இடையே வித்தியாசம் உண்டு. உருவ ஒற்றுமை இருந்தாலும்
குறிப்பிட்ட பெண்ணால் காதலனுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் போட்டோ ஷாப்
மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது எவர் பார்த்தாலும்
கண்டுபிடித்துவிடுவார்கள். நடந்தது எல்லாமே ஒரு செட்டப் என்பதனை காதலன்
நம்ப மறுக்கிறான். அப் பெண் உண்மையாகவே இறந்துவிட்டதாக அவர் கருதுகிறான்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு காதலி கான்சரில் இறந்துவிட்டதாக கதை
அளக்கிறது ஒரு கும்பல். இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவ மனையில்
கொழும்பில் இருந்து குறிப்பிட்ட பெயரில் எந்தப் பெண்ணும் வந்து தங்களிடம்
சிகிச்சை பெறவில்லை என்று மறுக்கிறது அதன் நிர்வாகம், அதுவும் அப்படி
யாரும் இறக்கவும் இல்லை என்று அவர்கள் அடித்துக்கூறுகிறார்கள்.
ஆனால் இங்கே நடப்பது என்ன ? அப்படி என்றால் இறந்ததாகச் சொல்லப்படும்
பெண் யார் ? அப் புகைப்படத்தில் உள்ளவர் யார் ? சரி இது எல்லாம் போகட்டும்,
இதன் பாகம் 2ம் தற்போது தொடர்கிறது.
அக்கா தான் குடுத்துவைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன்
என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு கனெக்சனைக்
கொடுத்துள்ளார். சுருக்கமா சொல்லப்போனா இறந்த காதலியின் தங்கை இப்ப இந்த
இளைஞனை லவ் பண்ணுதாம்.
இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு எண்டு எல்லாம் காசு கறக்கும்
நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ் புக்
ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாட்டி அவர்
கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல நடிப்பது.
இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது
தான் நான் என்று அனுப்புவது.
பின்னர் காசைக் கேடப்பது. ஏதாவது ஏடாகூடம், ஆனால் அவள் செத்துவிடுவாள்.
இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்ப எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது
என்று சொல்லி நழுவி விடுவார்கள் இவர்கள். குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு
உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பா சொல்லப்போனால் ரூம் போட்டு
இந்த வேலை கொழும்பில் நடக்கிறதாம். ஒரு ரூமில் 5 அல்லது 6 பெண்கள் இருந்து
குலத்தொழிலாக இதனைத்தான் செய்கிறார்கள். இதற்கான தகுதி கம்பியூட்டரில் டைப்
செய்ய தெரிந்திருக்க வேணும் ! அவ்வளவே !
இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான்
பலிகடா ! நாம் மேலே குறிப்பிட்ட இளைஞர் 1 வருடத்தில் 10,000 பவுன்சுகளுக்கு
மேல் அனுப்பியுள்ளார்.