Sunday, July 4, 2010

Awesome Catch by a Girl

'வுவுசெலா'


'வுவுசெலா' - தென்னாபிரிக்க உலக கிண்ண போட்டிகளை கலக்கும் சூப்பர் குரல்! 
'ஜபுலானி' (உலகிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட காற்பந்தின் பெயர்), Wave'n Flag (உலக கிண்ண போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட தீம் பாடல்) Zakumi (உலக கிண்ன போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட பொம்மை) இவையெல்லாம் தென்னாபிரிக்க ரசிகர் பட்டாளத்திற்கும் பெருமை சேர்க்க வந்த சூப்பர் கண்டுபிடிப்புக்கள் என்பது உங்களுக்கு தெரியும்! ஆனால் 'வுவுசெலா (Vuvuzele)' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? - உலக கிண்ண அணி வீரர்களையே வெறுப்புற வைத்திருக்கும் ஒரு கண்டுபிடிப்பு! வேறொன்றுமில்லை! வுவுசெலா என்பது  65 m நீளமான ஹோர்ன் தான்! ஆபிரிக்க மரை வகையான 'குடு' வின் தோலில்ஆரம்ப காலத்தில் செய்யப்பட்டது.  இப்போது பிளாஸ்ட்டிக்கில் வந்துவிட்டது.
 லெபடட்டா, சிவப்பு வுவுசெலா, கறுப்பு வெள்ளை வுவுசெலா என பல வகையான ஹோர்ன்கள் உண்டு. இதன் தாயகம் பிரேசில். லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பிரபல்யம்!
தென்னாபிரிக்காவின் 10 பிரமாண்டமான மைதானங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும் Fifa 2010 உலக கிண்ண போட்டிகளின் போது,
பார்வையாளர்களின் கரங்களில் ஆயிரக்கணக்கில் தவழ்கிறது இந்த வுவுசெலா.
கையில் வைத்திருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? எடுத்து ஊத ஆரம்பித்தால், நடுவரின் விசில் சத்தத்தை விட காதைபிய்க்கும்! (அடுத்த காலிறுதி போட்டிகளின் போது மைதானத்தில் வுவுசெலா சத்தம் எப்படி இருக்கும் என்பதை காதை கூர்மையாக்கி கேளுங்கள்). பிரான்ஸ் ஆரம்ப சுற்றுடன் வெளியேறியதற்கு கேப்டன் பட்ரிஸ் எவ்ரா கூறும் சூப்பர் காரணம் இந்த ஹோர்ன் சத்தம் தானாம்! சராமாரியாக திட்டுகிறார். காலில் பந்து கிடைத்ததும் காதை பிய்க்கிறதாம் இதன் சத்தம்.
ஆர்ஜெண்டீனாவின் லியோனெல் மெஸ்ஸியும் இதே புலம்பல் தான்! போட்டி நடைபெறும் போது மரடோனா, தனது வீரர்களுக்கு தொண்டை கிழிய கத்துவது வழமை! இந்த் ஹோர்ன் சத்தம் கேட்பதால், ஒன்றும் விளங்குவதில்லையாம்!
வர்ணனையாளர்கள், தொலைக்காட்சி சேவையாளர்கள், உலகளாவிய ரசிகர்கள் என அனைவரினது குரல்களும் வுவுசெலா மீது பாய்கிறது. ஆனால் வுவுசெலாவுக்கு தான் காதுகள் இல்லையே! அதன் சத்தம் ஓயவே இல்லை! ரசிகர்கள் வுவுசெலாவை வைத்து போடும் ஆட்டமும் குறையவில்லை! பிரபல்யமாகி கொண்டிருக்கும் இந்த வுவுசெலாவை வைத்து தனிப்பாட்டே உருவாக்கிவிட்டனர்
வுவுசெலாவுக்கு ஆதரவாக யூடியூப்பும் குரல் கொடுக்கிறது. புதிதாக காற்பந்து அடையாளத்துடன் ஒரு குறியீடு ஸ்கிரீனில் வலது கீழ் மூலையில் இருக்கும். கிளிக் செய்யுங்கள், வுவுசெலாவின் பீ..பீ.. சத்தம் காது கிழிய கேட்கும்!
- ஸாரா
Thanks To....4Tamilmedia

மக்கள் விருப்பைத் தீர்மானிக்கும் ஃபேஸ்புக்-டுவிட்டர்

பிரபல சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் தளங்கள் தற்காலத்தில் மக்களின் கொள்வனவு விருப்பத்தை தீர்மானிக்கும் சக்திமிக்க கருவிகளாக உள்ளன எனப் பிரபல இணையத்தள ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணையத்தள பாவனையாளர்கள் நால்வரில் ஒருவர் மேற்கூறிய சமூக வலைப்பின்னல் தளங்களுடன் இணைந்திருப்பதாகவும் அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 6 மணி நேரம் அவற்றுடன் செலவிடுவதாகவம் மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வர்த்தகக் குறிகளில் சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், விக்கிபீடியா, யூ டியூப் ஆகிய தளங்களும் உள்ளடங்குவதாக மேற்படி நிறுவனம் தனது கடந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேற் கூரிய சமூகவலைப் பின்னல் தளங்கள் மக்களின் நுகர்வுத் தெரிவில் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவும், அவை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் நீல்சன் நிறுவனத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ள்ஸ் புச்வால்டர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை மதிப்பீடு செய்வது மக்களிடையே மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாகத் தாம் கருதுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்படி நடைமுறையானது இலத்திரனியல் அழகுசாதனம் மற்றும் உணவுப்பொருட்கள் கொள்வனவில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது. சமூக வலைப்பின்னல் பாவனையாளர்களில் 32 சதவீதமானோர் தங்களது அலுவலகங்களிருந்தும், 31 சதவீதமானோர் தங்கள் படுக்கை அறைகளிருந்தும் வருகை தருவதாக மேற்படி ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வலைப்பின்னல், வலைதளங்கள் வணிக நடவடிக்கைகளில் பாரிய செல்வாக்கு செலுத்துவதுடன் இந்த மாற்றங்களுக்கு இசைவாகவும் அவை செயற்படுகின்றன என்பது புலனாகிறது.Thanks To.....Virakesari.
 

GMail

பிகாஸா அல்பத்தில் இருந்து பேஸ்புக் இல் நேரடியாக படங்களை அப்லோடிங்க் செய்வதற்கு.

படங்களை ஒழுங்குபடுத்தி வைக்க பிகாஸைவை பயன்படுத்துவராயின் இனி நீங்கள் அதிலிருந்து நேரடியாக பேஸ்புக்குக்கு படங்களை ஏற்றலாம்.
பிகாஸா அப்லோடர் உங்களின் பிகாஸா அல்பத்திலிருந்து நேரடியாக பேஸ்புக்குக்கு படங்களை அப்லோட் செய்ய உதவும் ஒரு பிளாகின் ஆகும்.
இதற்கு பேஸ்புக் கணக்கும் பிகாஸா மென்பொருள் 2.5 உம் உங்களிடம் இருக்க வேண்டும்.
கீழுள்ள இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்து பிளாகினை இன்ஸ்டால் செய்யும் போதே பேஸ்புக் பட்டனை செலெக்ட் செய்து சேர்த்துவிடுங்கள் அதன் பின்னர். பிகாஸாவில் அப்லோட் பேஸ்புக் என்ற பட்டன் தெரியும்.

முதல் முறை அப்லோட் செய்யும் போது பேஸ்புக் கணக்கின் விபரங்களை கொடுக்க வேண்டும் அதன் பின்னர் தேவையான படத்தை அல்லதை அல்பத்தை தேர்வு செய்து அப்லோட் செய்ய வேண்டியது தான்.
அப்லோட் செய்யும் போது பிரைவசி மற்றும் புதிய அல்பத்தை உருவாக்கல் போன்றவற்றிக்கு ஆப்ஸன்கள் உண்டு.
Install Picasa Uploader
Thanks To....4Tamilmedia

மூளையைப் பாதிக்கும் செயல்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. 

Thanks To..........Chittarkottai.