Friday, July 16, 2010

பேசு......... கிளியே....... பேசு.

உலகின் மிகச் சிறிய பெண்.

இந்தியாவின் ஜோதி அம்கே(Jyoti Amge ), வயது 14 . உலகின் மிகச் சிறிய பெண்ணாவார். இவர் 1 அடி 11 அங்குலம் (58Cm ) உயரமாகும். சாதாரணமாக 2 வயதுக்குழந்தையை  விடவும் குறைவான உயரத்தையே கொண்டுள்ளார்.அது மட்டுமன்றி இவரது நிறை 11 இறாத்தலாகும் (5Kg ) .

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்.




இந்த கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கனாயோ வான்ஸ் பேசுகையில், ‘உலகளவில் பசியால் வாடும் மக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 10 கோடி அளவை தாண்டியிருக்கிறது.
உலகில் விவசாயத்தை மேம்படுத்துவது தான் இந்த மக்களின் பசியை போக்குவதற்கான சிறந்த வழியாக நாங்கள் கருதுகிறோம்.
பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஆபத்தான நச்சு கலந்த உணவை உண்பவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.
விவசாயத்தை பெருக்குவதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதோடு, பசியையும் அகற்ற முடியும்’ என்றார்.

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா?

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.
முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது.இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும்.அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.
வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
Thanks To...www.z9tech.com

நோபல் பரிசு - புறக்கணிப்பு

இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரிப்பதை அம்பலப்படுத்திய மொர்டசாய் வானுனு, நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இருந்த தனது பெயரை நீக்கி விடும்படி கோரியுள்ளார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் மொர்டசாய் வானுனு. இஸ்ரேல் நாட்டின் அணு சக்தி நிலையத்தில் வேலை செய்த வானுனு, இந்த நாடு பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதாகப் பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
நாட்டின் இரகசியத்தை அம்பலத்தியதற்காக இவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இஸ்ரேலை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும் இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வரும் வானுனுவைப் பாராட்டி நோபல் பரிசு கமிட்டி இவரது பெயரை நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்துள்ளது.
தனது பெயர் நோபல் பரிசுக்கான பட்டியலில் உள்ளதை அறிந்த வானுனு கடந்த 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன தலைவர் யசீர் அராபத்துக்கும் - இஸ்ரேலின் அணு குண்டு தந்தையான ஷிமோன் பெரசுக்கும் சேர்த்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைச் சுடடிக்காட்டியுள்ளார்.
"ஷிமோன் பெரசுக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசு எனக்கு தேவையில்லை. ஷிமோன் வாங்கிய பரிசு பட்டியலில் நானும் இடம்பெற விரும்பவில்லை. எனவே, நோபல் பரிசு பெற உள்ளவர்களுக்கான பெயர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள்" என நோபல் பரிசு கமிட்டிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தகவலை நோபல் பரிசு கமிட்டி செயலாளர் கீர்லண்டஸ்டட் தெரிவித்துள்ளார். 

'குப்பைத் தீவு'

  பசுபிக் கடலில் ஒரு 'குப்பைத் தீவு' இருக்கின்றதென்றால் ஆச்சரியமாக இல்லையா?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தருகே உள்ள பசுபிக் கடலில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொன் குப்பைகள் சேர்ந்து ஒரு தீவாக உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே உள்ள பசுபிக் கடலில் நீரின் சுழற்சி வேகம் அதிகம் உள்ளது. இதனால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருட்கள் கூட இந்தப் பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன.
கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த இடத்தில் குப்பைகள் சேரத் தொடங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் அளவு பல மடங்கு சேர்ந்து விட்டன.
பிரிட்டன் தீவை போல ஆறு மடங்கு அதிகமாக இங்கு குப்பைகள் சேர்ந்து விட்டன. பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், தண்ணீர் போத்தல்கள், குளிர்பான டப்பாக்கள் என ஒரு தீவு அளவுக்கு குப்பைகள் சேர்ந்து விட்டன.
இந்தப் பகுதியில் வளரும் மீன்களின் வயிற்றில் குப்பைகளின் துகள்கள் உள்ளன. சமீபத்திய ஆய்வில் ஒரு மீனின் வயிற்றிலிருந்து 26 பிளாஸ்டிக் துண்டுகள் எடுக்கப்பட்டன.
இந்தத் தீவுக் கூட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும் என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிடும் மீன்களை மனிதர்களும் சாப்பிட்டால் அதனால், உடல்நிலை பாதிப்பு உண்டாகும். எனவே, இந்தக் குப்பை தீவை என்னசெய்யலாம் என தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென். பிரான்சிஸ்கோ மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த சுற்றுச் சூழல் வல்லுனர்கள், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளைக் கப்பல்களில் எடுத்து வந்து எரிசக்தி பொருளாக மாற்றலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ரிச்சர்ட் பெயின் குறிப்பிடுகையில்,
"சுற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்தத் தீவை உதாரணமாகக் காட்டலாம்" என்கிறார்.
பிரிட்டனின் பரப்பு 94 ஆயிரத்து 525 சதுர மைல்கள். ஆனால், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளின் அளவு ஐந்து லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல்கள். இந்தப் பகுதியில் கடல் தண்ணீரும் ரசாயனமாக மாறியுள்ளது எனவும் கூறப்படுகிறது.