Thursday, August 12, 2010

காமிக்ஸ் புத்தகம் விலை 19 லட்சம்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ளது ஹெரிடேஜ் ஏல மையம். 1940ம் ஆண்டில் வெளியான காமிக் புத்தகத்தை (படக்கதை) மைக் வீட் என்பவர் விரைவில் ஏலம் விடப் போகிறார். ‘பேட்மேன் நம்பர் 1’ என்ற அந்த புத்தகம், மிக அரிதானது.
 இதுவரை ஆன்லைனில் அந்த புத்தகத்தை வாங்க விருப்பம் தெரிவித்து பலர் விண்ணப்பித்துள்ளனர். விலை 16.45 லட்சத்தை தொட்டுள்ளது. எனினும், நேரடி ஏலத்தில் காமிக் புத்தகம் 18.8 லட்சத்துக்கு விற்பனையாகும் என்று மைக் எதிர்பார்க்கிறார்.