Sunday, March 4, 2012

அறியாத சில விடயங்கள் - 4

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது