Saturday, April 9, 2011

கைகள் இல்லையென்ற கவலையில்லையே.....


உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த பேனா.


 அண்டினியோ காடி (Antonio Gaudi)  என்பவரால் வடிவமைக்கப்பட்டு, Caran d'Ache என்ற சுவீஸ்லாந்து நிறுவனத்தினரால் தாயரிக்கப்பட்ட 'La Modernista Diamonds'  என்ற பேனா தான் உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
இப்பேனாவினை லண்டனைச் சேர்ந்த ஹர்ரோட்ஸ் (Harrods) என்பவர் , 265,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கொள்வனவு செய்துள்ளார்..
அரத்தியம் (rhodium) பூசப்பட்ட வெள்ளி நிறத்திலான இப்பேனாவில் 18 கரட் தங்கத்திலான முனையும், 5,072 வைரங்களும், 96 பாதி மாணிக்கங்களும் பொருத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சங்களாகும்.

Youtube யின் செல்லக்குழந்தை.

மழழையின் சிரிப்பு யாரைத்தான் நெகிழவைக்காது? இந்த வகையில் உலகின் பிரபல வீடியோ தளமான (Youtube) யூடியூப்பில் 8 மாதக்குழந்தை தனது தந்தை கடதாசியொன்றை  கிழிக்கின்ற போது சிரிக்கின்ற  சிரிப்பொலியை இதுவரை  14,067,289 பேர் பார்த்து ரசித்து  59,954 பேர் தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.