Wednesday, July 21, 2010

கை விம்பங்கள்.

நீண்டநேர விளையாட்டு - கின்னஸ்க்காக சிறுவன் சாதனை.

வத்திராயிருப்பு : கின்னஸ் சாதனைக்காக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா உலகின் நீண்ட நேரம் இயங்கும் "கம்ப்யூட்டர் கேம்' உருவாக்கியுள்ளான்.
வத்திராயிருப்பில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன். தாயார் ஆக்னெலின் இடைநிலை ஆசிரியை. இவர்கள், மகனின் ஆர்வத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டனர். தனது திறமையால் சி ப்ளஸ், விசுவல் பேசிக், லாங்வேஜ் வரை விரைவில் கற்றான். 2010 பிப்ரவரியில் கின்னஸ் சாதனைக்காக புதிய சாப்ட்வேர்களையும், அதில் எட்டு "கேம்'களை வடிவமைத்தான். இவை கின்னஸ் அமைப்பின் முதல்கட்ட தேர்வில் தேர்வாகி அடுத்தகட்ட பரிசீலனையில் உள்ளது. அடுத்த சாதனையாக உலகிலேயே மிக நீண்ட நேரம் இயங்கக்கூடிய "பவர் மைண்ட்' என்ற கேம் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளான். இதுகுறித்து நேற்று வத்திராயிருப்பில் பலர் முன்னிலையில் விவரித்தான்.
டெனித் ஆதித்யா கூறியதாவது: இது ஞாபக சக்தியை வளர்க்கும் "நியூமெரிக்கல் கேம் சாப்ட்வேர்'. பொழுதுபோக்கு "கேம்'களில் அதிகபட்சம் "10 ஸ்டேஜ்' வரை இருக்கும். நான் வடிவமைத்தது 570 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாடக்கூடியது. இதன் மொத்த அளவு "52 கேபி' மட்டுமே, என்றான்.
Thanks To.......Dhinamalar.

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி.

தர்மபுரி:தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள். அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, முத்து (85), காளியப்பன் (65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120 வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து கொள்கிறார்.
அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், "தன்னால் முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்' எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி வரும் காவேரியம்மாள், தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியதாவது:எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது துரைசாமியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் 14வது வயதில் பூப்படைந்தேன்.  ஆரம்பத்தில் எனது சொந்த ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம் வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும்  கூலி வேலைக்கு நானும், என் கணவரும் வந்தோம். தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம்.சோளம், தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி, மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என் ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.
இது வரையில் ஊசி போட்டதில்லை, மாத்திரைகள் சாப்பிட்டதில்லை. வீட்டில் நான் மூத்தவள் என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது.அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு, கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும் நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தேன். எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர் உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடல் நல பாதிப்பு: டாக்டர் கணிப்பு :காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ""பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை. ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,'' என்றார்."அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு' என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.
Thanks To....Dhinamalar

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் 7

Google முதற்றே உலகு

கேட்டது கொடுக்கும் மணிமேகலையின் அட்சயபாத்திரத்தைப் போன்றதுதான் இந்த Google-ம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து தகவல்களையும் கேட்ட நேரத்தில், கேட்ட மாத்திரத்தில், கேட்டவிதத்தில் அள்ளித்தருவது Google-தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான Google இப்பொழுது அதனையும் தாண்டி பல சேவைகளை உயர்தரத்துடன் இலவசமாக வழங்கி வருகிறது. அவற்றுள் பலவற்றைப் பற்றி அறிமுகமிருந்தாலும், சில இன்னும் பலரால் அறியப்படாமலேயே இருப்பதினால் அவற்றைப்பற்றியதான ஒரு சிறு அறிமுகம்.
Google Docs
Microsoft நிறுவனத்திற்கு இயங்குதளத்தைக்காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டித்தருவது MS Office தான் என்றால் அது மிகையாகாது.அத்தகைய Office Application தான் இந்த Google Docs. இதில் Word, Powerpoint,Excel என அனைத்தும் உள்ளன. எந்தவொரு கோப்பையும் உடனடியாக PDF வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம். MS Office நமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இணையத்திலேயே இத்தகைய கோப்புகளை உருவாக்கலாம். இதனால் கோப்புகளை எந்த இடத்திலும் எளிதாக பெற முடிகிறது. ஒரு கோப்பினுள் பலரும் கூட ஒரே நேரத்தில் பணியாற்றவும், பயன்படுத்தவும், மாற்றவும் முடியும். மேலும் விவரங்களுக்கு www.docs.google.com
Google sites
இணையதளங்களை காசுகொடுத்து உருவாக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. மேலும் இணையதளங்களை உருவாக்குவதற்கென பிரத்யேக அறிவும் இனி தேவையில்லை.மிக எளிதாக Google sites-ல் நம் விருப்பத்திற்கு ஏற்ப இணையதளங்களை உருவாக்கலாம். வலைப்பூக்கள் கூட இலவசம் என்றாலும் அதில் நாம் கோப்புகளை பதிவேற்ற முடியாது. ஆனால், Google sites-ல் எத்தகைய கோப்புகளையும் பதிவேற்ற முடியும். பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியும். அவர்களின் கருத்துக்களை/விமர்சனங்களை பெறமுடியும். ஆரம்பகட்ட பயனாளர்கள், இத்தகைய இலவச வசதியினை பயன்படுத்திகொள்வது சிறந்தது. பொதுவாக Google sites, கீழ்க்கண்டவற்றுக்கு மிகவும் உகந்தது.
  1. தனிப்பட்ட பயன்பாடு (Personal Use)
  2. திட்ட மேலாண்மை பயன்பாடு (Project Use)
  3. நிறுவன உள் இணையம் (Company Intranet)
  4. சமூக வளர்ச்சி அமைப்பு (Community Development)
மேலும் விவரங்களுக்கு www.sites.google.com
Google Calendar
இன்றைய வேக உலகில், எதனையும் திட்டமிட்டு நடத்திச்சென்றாலும் கூட, தவறுகள் சில ஏற்படத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் நினைவில்கொள்வது என்பதும் காரிய சாத்தியமில்லாததும் கூட. பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று திட்டு வாங்கியது கூட உண்டு. ஆனால், Google Calendar பயன்படுத்துவதால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் பதிவு செய்துவிட்டால் போது. உரிய நேரத்தில், SMS, Pop-up,Email என நமது வசதிக்கேற்ப தகவலை அளித்துவிடும். மேலும் விவரங்களுக்கு www.calendar.google.com
Google Picasa
நமது இனிய தருணங்களை என்றும் நினைவுபடுத்தும் அதிசயம் தான் புகைப்படங்கள். நாம் ரசித்த காட்சிகளை மீண்டும் நம்முன்னே கொணடுவரும் இத்தகைய புகைப்படங்களை பத்திரமாக சேமித்துவைக்க சுமார் 1.5 GB இடம் Google-ஆல் இலவசமாக தரப்படுகிறது. விருப்பமிருப்பின், இத்தகைய புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். என் இணையதளத்தின் இடத்தை சேமிக்க நான் பயன்படுத்துவது  Google Picaso தான். கட்டுரைகளுக்கு தேவைப்படும் புகைப்படங்களை இதில் ஏற்றிவிட்டு, பின் இணைப்பை மட்டும் இணையபக்கத்தில் தந்துவிடுவதினால் ஏராளமான இடம் சேமிக்கப்படுகிறது. புகைப்படங்களை வகைவகையாக பிரித்துவைக்கவும், தேவையானபொழுது பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு http://picasaweb.google.co.in/
Thanks To.....Tamilcafe