முயற்சி பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லன்னு சொல்வாங்க இது எல்லாத்துக்கும் பொருந்துதோ இல்லையோ தொழில்நுட்பத்துக்கு கண்டிப்பா பொருந்தும்.
வளர்ந்து வர்ற தொழில்நுட்ப வளர்ச்சியில புதுசு புதுசா கண்டுபிடிப்புகளை தர்றது அறிவியலோட அதிசயமா இருக்கு.
அந்த வகையில முதல் முறையா மொபைல்ல "விண்டோஸ் எக்ஸ்பி" மென்பொருளை பயன்படுத்தி கிட்டதட்ட ஒரு லேப் டாப் மாதிரியே வர்ற மொபைல் தான் xp phone.
மொபைல்,லேப் டாப்,ஜி.பி.எஸ் இப்படி மூனையும் ஒரே சாதனத்துல அடக்கியிருக்காங்க...
இதோட சிறப்பம்சங்கள்னு பாத்தீங்கன்னா...
* 4.8' touch screen
* VGA output to 1920 * 1200 resolution
* Operating System: Microsoft Windows XP
* Support MSN/Skype/QQ free video calls
* Support more than 500 kinds of video/audio formats
* Ports:1 x earphone jack,1 x microphone jack,Docking Connector
(include VGA output signal ),1 x USB 2.0, SIM Slot
* Wireless:WiFi 802.11b/g,WiMax(optional),Buletooth,Stand-alone GPS
இது மட்டுமில்லாம இந்த போனுக்குன்னே அப்ளிகேஷேன்கள் தரவிறக்கம் செய்யிறதுக்கு xpmall இருக்கு அதிலேர்ந்து ஒரு கோடிக்கும் மேல அப்ளிகேஷேன்கள் நாம தரவிறக்கம் செய்யலாம்.
இப்படி இந்த போன் வசதிகளை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். சரி இத எந்த நாட்டு நிறுவனம் தரப்போகுதுன்னு நான் கேட்டால் உடனே நீங்க அமேரிக்கா, ஜப்பான்,கொரியான்னு போயிடாதீங்க, சீனாவை சேர்ந்த In Technology Group Limited (ITG அப்படிங்கிற நிறுவனம் தான் தரப்போகுது.
இன்னும் மார்கெட்டுக்கு இந்த போன் வரல ஆனா இப்பவே "ஆன்லைன்"ல ஆர்டர் பண்ணலாம்.அநேகமா இந்த போன் ஆப்பிள் போனுக்கு பலத்த போட்டியா வரும்போல.