30.5 மீற்றரும் 26 சக்கரங்களையும் கொண்ட உலகிலேயே மிக நீண்ட உல்லாச ஊர்தியினை அமெரிக்காவின் கலிபோனியாவிலுள்ள Jay Ohrberg of Burbank நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர். இவ்வூர்தியானது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது பிரதானமாக சினிமா படப்பிடிப்புக்களுக்கும், கண்காட்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வூர்தியில், பெரிய அளவிலான குளியல் தொட்டி,ஹெலிகொப்டர் இறங்குவதற்கான தளம், படுக்கையறை,செய்மதி என் பல்வேறு வசதிகள் உள்ளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.