Monday, July 5, 2010
ரெட் ஒன் கேமரா
சினிமா தோன்றியது முதல் இன்று வரை திரைப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.ஃபிலிமை (Film) பயன்படுத்தி மட்டுமே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சினிமா உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் கேமராக்களின் மூலம் ஒரு முழு திரைப்படத்தை படமாக்க முடியும் என்று களத்தில் இறங்கிவிட்டனர், படைப்பாளிகள்.
'ரெட் ஒன் கேமரா' மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்திய திரைப்படத்திலும் இப்போது இதனை பயன்படுத்துகின்றனர்.
இந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் (Resolution) பதிவு செய்ய முடியும். உலகம் முழுவதும் மொத்தமாக 5000-க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலை ரூ. 8 லட்சமாம். படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் திருட்டு விசிடிக்காரர்கள் புரிஞ்சுகிட்டா சரி!
Thanks To.......www.z9tech.com

சைக்கிள் ஓட்டும் ரோபோ
Cyclist Robot
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு _
செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.
விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும். Thanks To.....Virakesari

Subscribe to:
Posts (Atom)