Monday, March 19, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு!!

 
கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.

உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர்,https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.