Saturday, June 5, 2010

உலகின் புதிய 7 அதிசயங்கள்

உலகின் புதிய 7 அதிசயங்கள்: முதலிடத்தில் தாஜ்மஹால்
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.


Click to Enlarge
Click Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge

ஆதிகாலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டுமே.

இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்த ஏழு உலக அதிசயங்களில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவையும் அடக்கம்.

இந்த நிலையில், தற்போதுள்ள கால கட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

இதற்கான முயற்சிகளை ஸ்விட்சர்லாந்தை நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட கனடா நாட்டவரான பெர்னார்ட் வெப்பர் என்பவர் தொடங்கினார்.

இந்த உலகளாவிய வாக்கெடுப்பு குறித்து ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. யுனேஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று அது கருத்து தெரிவித்தது.

மேலும், இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பெருமளவில் பண முறைகேடுகள் நடப்பதாகவும், மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பின.

இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் ஏராளமானவை போட்டியில் இருந்தன.

உலகம் முழுவதிலுமிருந்து 10 கோடி பேர் www.new7wonders.com என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்தியாவிலிருந்து தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதுப்மினார் உள்ளிட்ட பல கட்டட அதிசயங்கள் இடம் பெற்றிருந்தன. இறுதியில், தாஜ்மஹால் உள்ளிட்ட 21 கட்டடங்கள், அதிசய சின்னங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

இவற்றிலிருந்து ஆறு மட்டுமே உலக அதிசயங்களாக சேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. எகிப்தில் உள்ள பிரமிடுகளின் காலம், பெருமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அது உலக அதிசயமாக வாக்கெடுப்பின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே 6 உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆறு உலக அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன.

லிஸ்பனில் உள்ள பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஆறு உலக அதிசயங்களும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,

1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
7. ரோம் நகரின் கொலோசியம்.
நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவிலிருந்து இடம் பெற்றுள்ள ஒரே இடம் ரோம் நகரின் கொலோசியம்தான். இந்தப் போட்டியில் பிரான்ஸின் ஈபிள் டவர், அக்ரோபோலிஸ் ஆகியவையும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஏழு அதிசயங்கள் தேர்வு குறித்து இந்த வாக்கெடுப்புக்ககான கமிஷனராக செயல்பட்ட முன்னாள் போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் பெரேடஸ் டோ அமரல் கூறுகையில், உலக அளவில் நடந்த மிகப் பெரிய வாக்கெடுப்பு இதுதான் என்பதில் புதிய வரலாறு படைத்துள்ளோம். இந்த நிகழ்வு சிறப்பான முறையில் முடிந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

ஏழு உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி படு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பாப் ஸ்டார் ஜெனீபர் லோபஸ் கலந்து கொண்ட கலக்கல் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவுடன் ரியோ டி ஜெனீரோ, பெரு, மயன் கட்டடங்கள் அமைந்துள்ள சிச்சேன் இட்ஸா ஆகிய நகரங்களில் மக்கள் வீதிகளில் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

Click to Enlarge
Click Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge
Click to Enlarge

ரியோ டி ஜெனீரோவில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டதை பிரேசில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். ரியோ நகரின் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகளாக தென்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பின் மூலம் வசூலான பணத்தின் பாதியைக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைத் தொடரில் உள்ள புத்தர் சிலையை மறு சீரமைப்பது உள்ளிட்ட செயல்களுக்காக பயன்படுத்தப் போவதாக வெப்பர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள்:

பண்டைய உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடுகள்தான்.

பண்டைய உலக ஏழு அதிசயங்கள் பட்டியல்,

1. எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஸா பிரமிட்.
2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த தொங்கும் தோட்டம்.
3. ஆர்ட்டிமிஸ் கோவில்.
4. ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை.
5. மாசோலஸ் மசோலியம்.
6. ரோட்ஸ் சிலை.
7. அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம்.
நன்றி,முனாஸ் கான்

சைக்கிள் ஓட்டும் ரோபாட்

image

ஜப்பானின் முராதா எலக்ட்ரானிக் நிறுவனம் சைக்கிள் ஓட்டும் புதிய ரோபாட் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. டோக்கியோ அருகே உள்ள சிபா நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த `முராதா சீக்கோ சான்' ரோபாட் ஒற்றை சக்கர சைக்கிளை சர்வ சாதாரணமாக ஒட்டும் காட்சி. அருகில் இன்னொரு ரோபாட் 2 சக்கர சைக்கிளை ஓட்டுகிறது.

நன்றி,விபரம்

facebook மால்வேர் எச்சரிக்கை!

facebook தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சமூகத்தளம். இதனால் இதை பயன்படுத்துபவர்களின் பயனர் கணக்கை ஹேக் செய்ய பலரும் தற்போது வித விதமாக முயற்சித்து வருகிறார்கள். இது தற்போது நடக்கும் ஹேக் பற்றிய எச்சரிக்கை!

கீழே உள்ள படத்தில் இருப்பது போல உங்கள் facebook Wall பகுதியில் ஏதாவது சுட்டி (Link) வந்தால் சபலப்பட்டு அதை க்ளிக் செய்து விடாதீர்கள்! நீங்கள் அப்படி க்ளிக் செய்தால் உடனடியாக மால்வேர் மென்பொருளை நிறுவி விடும் எனவே இதைப்போல உங்கள் facebook ல் கண்டால் உடனடியாக அதை நீக்கி விடவும் க்ளிக் செய்யாமல்.

facebook malware facebook மால்வேர் எச்சரிக்கை!

எந்தக்காலத்திற்க்கும் ஏற்ற எச்சரிக்கை என்னவென்றால் எப்போதுமே சந்தேகமாக உள்ள சுட்டிகளை க்ளிக் செய்வது ஆபத்தையே வரவழைக்கும். எனவே இதைப்போல சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.

நன்றி,கிரி ப்ளாக்

தனியார் ராக்கெட்

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வுத்துறை விண்வெளிக்கு ராக்கெட்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பி வரும் நிலையில் முதன் முறையாக தனியாருக்கு சொந்தமான ஒரு ராக்கெட் அமெரிக்காவிலிருந்து நேற்று விண்ணில் சீறிப் பாய்ந்தது.

நாசாவுக்காக விண்ணிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த ராக்கெட் பரிசோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

பேபால் நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்-ற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் முதன்முறையாக ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் சில பிரச்சனைகள் காரணமாக அது கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த ராக்கெட் அமெரிக்காவில் உள்ள கேப் கனவரெல் விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நபர்களையும் சரக்குகளையும் அனுப்புவதற்கு தனியாரை ஈடுபடுத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளார். அவரது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

நன்றி,நிகழ்வுகள்

பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக தளமான பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.

லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.

இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.

அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி பேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி,நிகழ்வுகள்