சிகரெட், மதுவைக் காட்டிலும் இண்டர்நெட் மோகத்தை கைவிடுவது கடினம்!
இன்றைய
கணினி உலகில் மின்னஞ்சல், எஸ்எம்எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகம்
இளைய தலைமுறையினரிடையே அத்தியாவசியமான ஒன்றாகி போய்விட்டது.
இன்றைய இளைஞர்கள் கையில் வேறு எது இருக்கிறதோ இல்லையோ... லேப்டாப் அல்லது மொபைல்ஃபோன் இருப்பது சர்வ நிச்சயமாகி விட்டது.
இந்நிலையில்
இந்த சமூக ஊடகம் நமது இளைஞர்களிடையே எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியுள்ளது
என்பது குறித்து ஆய்வு ஒன்றை சிகாகோ பல்கலைக்கழக குழு ஒன்று நடத்தியது.
இதில் சிகரெட் மற்றும் மதுவைக் காட்டிலும் மேற்கூறிய சமூக ஊடகத்திற்கு பலர் மிகவும் அடிமைப்பட்டிருப்பது உறுதியானது.
உட்ஸ்பர்க்கின்
ஜெர்மன் நகரத்தில், பிளாக்பெர்ரியைப் பயன்படுத்தி 18 முதல் 85
வயதிற்குட்பட்ட 205 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது மன
உறுதி பரிசோதிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது அனுபவம் மற்றும் வலிமை பற்றி ஒரு நாளைக்கு ஏழு முறை கேட்கப்பட்டது.
அவர்கள்
கூறிய முடிவுகளுடன், ஆயிரக்கணக்கான பதில்களைக் கொண்டு குழு
பார்வையிட்டதிலிருந்து, மது மற்றும் சிகரெட்டைக் காட்டிலும் சமூக ஊடகத்தைத்
தடைசெய்வது கடினம் என்று தெரியவந்துள்ளது.