Sunday, May 16, 2010
பேஸ்புக்கில் பரவும் புதிய ஸ்பாம் வைரஸ்
இது உண்மையில் ஒரு வீடியோ கிடையாது.பேஸ்புக்கில் தரவேற்ற பட்டிருக்கும் வீடியோ போல் காட்சியளிக்கும் ஒரு இமேஜ் ஆகும். அந்த இமேஜை கிளிக் செய்தால் இன்னொரு தள முகவரிக்கு எடுத்துசெல்லப் படுவீர்கள் . பின்னர் அந்த தளத்தில் உள்ள பிளே பட்டனை அழுத்தினால் , அந்த லிங்க் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு அப்பிளிகேஷனை நிறுவும்.
பின்னர் உங்கள் நண்பர்களின் பெயரில் உங்களுக்கும் உங்களின் பெயரில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோ லிங்கை இணைக்கும்.இது தானியங்கியாகவே சுவர்ப்பதிவுகளை ஏற்படுத்தும். இந்த வீடியோவை தவறுதலாகவோ அல்லது ஆர்வக்கோளாறிலோ கிளிக் செய்திருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இடது பக்கத்தில் "Application" என்ற பிரிவு இருக்கும் . அங்கே சென்றால் நீங்கள் பயன்படுத்தும் அப்பிளிகேஷன்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் "Winamp" என்ற பெயரில் உள்ள அப்பிளிகேஷனை நீக்கி விடுங்கள்.
நான் எனது நண்பர்களின் பக்கங்களை பார்த்தபோது எனது பெயரில் பலரின் பக்கங்களில் அப்டேட் செய்யப்பட்டிருந்த்தது. எனவே இத வீடியோ இணைப்பு உங்கள் முகப்பு பக்கத்தில் தோன்றினால் கிளிக் செய்யாதீர்கள் உடனடியாகவே நீக்கி விடுங்கள்!!!
Thanks To .........www.honeytamilonline.co.cc
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு
நம் எண்ணத்தை உடல் அசைவு மூலம் தெரிவிக்கும் புதியகருவியை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துள்ளது. உடல் அசைவை” இஎம்ஜி மசில் சென்ஸார் ” ( EMG muscle sensor) மூலம்மென்பொருளுக்கு இன்புட் ஆக கொடுத்த்து சாதனை படைத்துள்ளனர்.
எப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம்.
எப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம்.
நம் உடலில் EMG சென்ஸார்-ஐ பொருத்தி விடுகின்றனர்.எந்த விரல்களை நாம் தொடுகிறோம் என்பதை நீயூரோ ஸ்கை( NeuroSky ) கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கிறது. சரியாக நாம்தொட்டுகொண்டிருக்கும் பகுதியின் ஆரம்பம் முதல் முழுவதும்சரியாகதெரியப்படுத்துகிறது.
மொபைல் போனை இனிதொடவேண்டாம் நம் விரல்களை தொட்டாலே அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான். இதை வைத்து இன்னும் மைக்ரோசாப்ட் பல வித ஆராய்ச்சியில்இறங்கியுள்ளது.
Thanks To...........www.z9tech.com
Subscribe to:
Posts (Atom)