Saturday, July 2, 2011

வாகன விபத்துக்கள்



























புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  கேசரி பவுடர்!

வீட்டில் எளிதாகச் செய்யும் இனிப்பு கேசரி. முந்திரிப் பருப்பு, திராட்சை என அதில் சேர்க்கப்படுகிற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணமாகத்தான் இருக்கிறது."இப்படி கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் சேர்க்கப்படும் கேசரி பவுடரில் கார்ஸினோஜன் என்ற பொருள் இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது'' என்கிறார் சித்த மருத்துவரான சிவராமன். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள ஆரோக்யா சித்த மருத்துவமனையில் இருந்த அவரிடம் பேசினோம்.
"குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் கலரிலும் கார்ஸினோஜன் இருக்கிறது. ஆனால் நிறையப் பேருக்கு இது தெரிவதில்லை. கலர் கலராக உள்ள பொருட்களைச் சாப்பிடுவதிலும், அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலும் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை'' என்ற அதிர்ச்சி உண்மையைச் சொல்கிறார்.

 வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய்மிளகாய் பொடிமசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடுவயிற்று புண்வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்.
சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் குணமும் வெந்தயத்துக்கு இருக்கிறது. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 25 வயது முதல் 52 வயது வரை உள்ள 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என 45 நாட்களுக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவுதாம்பத்திய உறவில் ஆர்வம் ஆகிவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு பிரிவினருக்கு வெந்தயம் அல்லாத வெறும் சாறு கொடுக்கப்பட்டது.
வெந்தய சாறு குடித்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள்ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. வெறும் சாறு குடித்தவர்களின் ஹார்மோன்   உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். திருமணமானவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியுடனும் இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.