Tuesday, December 28, 2010

மணிக்கு 486Km வேகம் கின்னஸ் உலக சாதனை

சீனா மணிக்கு 486Km வேகத்தில் இயங் கும் அதிவேக இரயிலை வடிவமைத்துள்ளது. இந்த இரயில் வெள்ளோட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று விடப்பட்டது.
1,318Km தூரமுள்ள இந்த தூரத்தை இந்த ரெயில் சுமார் 5 மணி நேரத்தில் சென்றடைந்தது. இந்த ரெயில் வருகிற 2012-ம் ஆண்டு முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் ஓடத் தொடங்கும் பட்சத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டி.ஜி.வி. அதிவேக ரெயில் மணிக்கு 574Km வேகத்தில் ஓட்டி வெள்ளோட்டம் நிகழ்த்தப்பட்டது.
2005-ம் ஆண்டு ஜப்பானில் மணிக்கு 581Km வேகத்தில் சோதனை ஓட் டம் நிகழ்த்தப்பட்டது. தற்போது சீனாவின் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டுள்ளது.
வருகிற 2012-ம் ஆண்டு மக்கள் பயணம் செய்யும் வகையில் ஓட்டப்படும். அதற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரெயிலை 2012-ம் ஆண்டில் 13000Km தூரம் இயக்கவும், 2020-ம் ஆண்டில் 16000Km தூரம் இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய நகரங்களுக்கு இடையே ஏற்படும் போக்கு நெரில் குறையும் என்றும் கருதப்படுகிறது.

நீரிலும், நிலத்திலும் சவாரி செய்யும் அதிசய பஸ்.

முதன் முறையாக  மத்திய கிழக்கில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துபாயில்  இந்த நீரிலும் நிலத்திலும் ஓடும் அதிசய பஸ் வண்டி சேவையில் உள்ளது.
ஆசியாவிலே ஜப்பானுக்கு(Osaka) அடுத்ததாக துபாய் இந்தப்பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
44 இருக்கைகள் கொண்ட இந்த அதிசய பஸ் வண்டி அழகான உள்ளக அலங்கார வடிவமைப்பு, குளிரூட்டி, உள்ளக குளியலறை, ஒலியமைப்பு, தொலைகாட்சி போன்ற வசதிகளைக் கொண்டமைந்த உலகின் ஒரேயொரு பஸ் வண்டியாகும். 
Burjuman Center லிருந்து தனது இரண்டு மணித்தியால பிரயாணத்தை ஆரம்பிக்கும் இந்த இந்த நில, நீர் சவாரி  Sheikh Khalifa Road, - Sheikh Rashid Road, - Al Wafi Bridge, - Wafi City Center, -Al Boom Restaurant ஊடாக 1.15 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து, திரும்பி Dubai Court ஐ ஊடறுத்து , Al Maktoom Bridge, - Sheikh Maryam Palace - Seef Road near British Embassy -வழியாக, மீண்டும் Sheikh Khalifa Road ஊடாக Burjuman Centre ஐ அடையும்.
இதில் பயணம் செய்யும்  சுற்றுலா பிரயாண வழிகாட்டி அரபி, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக விளங்கப்படுத்துவது சிறப்பம்சமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த சவாரி இடம்பெறுகின்றது.