Sunday, April 3, 2011

Amazing Future Technology.


உலகின் மிக இளவயதுத் தந்தை.

 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 13 வயதுடைய உலகின் மிக இளவயதுத் தந்தை அல்ஃபீ பேட்டன் (Alfie Patten). இந்தச் சிறுவன், 12 வயதாக இருக்கும் போது 15 வயதுடைய பள்ளித் தோழி சான்டெலி ஸ்டெட்மெனுடன் வைத்துக் கொண்ட பாதுகாப்பற்ற தகாத உறவின் காரணமாக ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானது பரபரப்பை ஏற்படுத்தியது.
13 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக மாறிய அல்ஃபீ பேட்டனை உலகப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. சான்டெலியின் ஆண் நண்பர்கள் சிலர் “சான்டெலியுடன் எங்களுக்கும் உடல் ரீதியான தொடர்பு இருந்தது” என்று வெளியிட்ட உண்மையின் காரணமாக சிறிது காலத்திலேயே இந்தப் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இதன் பின்னர் மெய்ஸி ரோக்சனி என்ற அந்தப் பெண் குழந்தை மரபணு (DNA) பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது,  சோதனையின் முடிவில் அக்குழந்தையின் தந்தை அல்ஃபீ பேட்டன் அல்ல என்ற உண்மை வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பெண் குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்ற கேள்விக்கு சான்டெலி ஸ்டெட்மெனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஜோடி ஓனியல் சமீபத்தில் தெரிவித்த ஈஸ்ட் சுஸெக்ஸ் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சான்டெலி வந்திருந்த போது அங்கு ஒரு பையனுடன் ஏற்பட்ட பாதுகாப்பற்ற உறவுதான் குழந்தை உருவாவதற்கு காரணமாக இருக்கலாம் என்ற கருத்து மூலம் இந்த  கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
இருந்தாலும்,  13 வயதில் தந்தையான பெருமையை பெற்ற சில நாட்களிலேயே, அதற்கு களங்கம் ஏற்பட்டு விட்டதால் சிறுவன் அல்ஃபீ பேட்டன் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன..
பிரிட்டனில் 2000 மற்றும் 2005ம் ஆண்டு காலப்பகுதியில்  குழந்தை பெற்றுக்கொண்ட 1000 பேரில் 27 பேர் சுமார்  15-19  வயதுக்கிடைப்பட்டவர்கள் என சர்வதேச சனத்தொகை நடவடிக்கை நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினில் 1000 க்கு 10 பேரும், பிரான்சில் 1,000 க்கு 8 பேரும், நெதர்லாந்தில் 1,000 க்கு 5 பேரும் என்ற கணக்கிலும் இளவயது முறையற்ற பிரவசங்கள் நடைபெறுவதாக மேலும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது பிரிட்டனின் விகிதம் குறைவு என்ற போதிலும், ஆங்கிலம் பேசும் நாடுகளில் 1000 க்கு  44பேருடன், ஆஸ்திரேலியா மற்றும், நியூசிலாந்து போன்ற நாடுகளில்  1000 க்கு 17- 27 பேர் வரையில் 15 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட முறையற்ற இளவயது பிரவசங்கள் இடம்பெறுகின்றன.
“பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும் காண்பிக்கும் ஆபாசக் காட்சிகளின் விளைவுதான் இது”
பெற்றோர்களே.........! தங்கள் பிள்ளைகளின் மீது எச்சரிக்கையாக இருங்கள்.

ஆஸ்திரேலியாவின் மரச்சிற்ப பூந்தோட்டம்.


ஆஸ்திரேலியாவின்  மெல்போர்ன் நகரில்  150 க்கும் மேற்பட்ட மரசிற்பங்களை கொண்டமைந்துள்ள  ப்ருனோ (Bruno) பூந்தோட்டம்.































‘Gabler’ செல் போன்கள்

இன்றைய யுகத்தில் ஆண், பெண், சிறியோர், முதியோர் வித்தியாசமின்றி அனைவரும் செல் போன்கள் பாவிக்கின்றனர். இதனடிப்படையில் முற்று முழுதாக பெண்களை மனதில் கொண்டு Paz Brouk நிறுவனத்தினரால் “Gabler” செல் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இச்செல் போன்கள் இரண்டு பக்கமும்  வளையும் தன்மை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமையால் பக்கெட்டுக்களின், பைகளின் விளிம்புகளில் செருகி இலகுவாக எடுத்து செல்ல முடியுமாகவுள்ளது.
அத்துடன் , நவீன செல் போன்களில் காணப்படும் நாட்காட்டி, நேரம் காட்டி, முகவரி புத்தகம், கமேரா என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வருங்காலங்களில்  சந்தையில் எதிபார்க்கலாம்.





இது இந்தியாவில் மட்டும்..........1