Wednesday, September 8, 2010

இலங்கையர் ஒருவரின் உலக சாதனை.

உலகிலேயே மிகவும் நீளமான சுருண்ட ஆணின் தலைமுடி.
இலங்கையிலிருந்து  கடந்த 1995 ம் ஆண்டு இடம்பெயர்ந்து கனடாவின்
Thornhill, Ontario வில் வசித்து வரும் சுதேஷ் முத்து என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரராவார்.
இவரது, சுருண்ட தலை முடியின் நீளம் 1.91 (6 feet 3 inches) மீற்றர்களாகும். இலங்கையின் தலைநகர் கொழும்பில் கல்வி கற்கின்ற காலங்களில் ஜமைக்கன் இசையமைப்பாளர் Bob Marley  இனால் கவரப்பட்டு சுமார் 23 வருடங்களாக இந்த முடியினை அவர் வளர்த்து வந்ததாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். அவருக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றி,
Canada Lanka News Forum

ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”

உலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில் டி.வி.யில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவு ஆபாச காட்சிகளும் இடம் பெறுகிறது.
எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது அந்த காட்சிகளை பெற்றோர் தடைசெய்ய படாதபாடு படுகின்றனர். அதே சமயம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் சில ஆபாச காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதிய வழிவகையை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஆபாச காட்சிகளுடன் கூடிய டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதபடி செய்ய புதிய ரிமோட் கண்ட்ரோலை வடிவமைத்து தயாரித் துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்ப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெக்டியல் காலன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர்.
இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கவில்லை. சாதா ரணமாக ரிமோட் கண்ட் ரோலில் சிறிது மாற்றம் செய்து உள்ளனர். மேலும் இதில் நவீன மாற்றங்கள் செய்து  ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் நடைபெற உள்ள விஞ்ஞானிகள் மாநாட்டில் இதை சமர்ப்பிக்க உள்ளனர்.

கொலம்பியா குள்ள மனிதர் - கின்னஸ் சாதனை

பொகொடா : கொலம்பியாவை சேர்ந்த 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்தவர் எட்வர்டு நினோ ஹெர்னாண்டஸ் (24). இவரின் எடை 10 கிலோ, உயரம் 70.21 சென்டி மீட்டர்(27.64 Inches). உலகில் தற்போது இருப்பவர்களில் மிகவும் குள்ள மனிதர் இவர்தான். இதனால் இவரின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் கின்னஸ் சாதனை பட்டியலிடும் அமைப்பு எட்வர்டு நினோவை உலகின் குள்ள மனிதராக அறிவித்து, அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருதை வழங்கியுள்ளது. இதற்குமுன் சீனாவை சேர்ந்த ஹெ பின்பின்க் 1.5 இன்ச் (4 சென்டி மீட்டர்) குறைவான உயரத்துடன் குள்ள மனிதர் என்ற சாதனையை வசமாக்கினார். அண்மையில் அவர் இறந்து விடவே, உலகின் குள்ள மனிதர் என்ற பட்டத்தை நினோ தற்போது தட்டிச் சென்றார்.
நினோவின் தாயார் நவோமி ஹெர்னாண்டஸ் கூறுகையில், நினோ பிறக்கும் போது 1.5 கிலோ எடையும், 38 சென்டி மீட்டர் உயரத்துடனும் இருந்தான். 2 வயதுக்குப்பின் அவனுக்கு வளர்ச்சி இல்லாமல் போனது. இதையறித்து மருத்துவரை அனுகியபோது அவனுக்கு வளர்ச்சி ஏற்றபட வாய்ப்பில்லை என்று கைவிரித்து விட்டனர். அப்போது இருந்து அதே உயரத்தில்தான் இருக்கிறான் என்றார் அவர்.
நினோவுடன் உடன் பிறந்தவர்களில் 11 வயதுடைய ஏஞ்சல் என்பவர் 93 சென்டி மீட்டர் உயரத்துடன் உள்ளார். மற்ற 3 பேர் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சராசரி வளர்ச்சியில் உள்ளனர். நினோவுக்கு ஆடுவது என்றால் மிகவும் பிடிகுமாம். ஆடம்பர சொகுசு காரான மெர்சிடிஸ் மாடலை சொந்தமாக வாங்கி பயணம் செய்ய ஆசையாம். மேலும் அவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சில்வர் ஸ்டோலன், கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ ஆகியோரை சந்திக்க விரும்புதாகவும் தெரிவித்துள்ளார்.

Thanks Yahoo News
http://asia.news.yahoo.com/afp/20100907/tls-lifestyle-offbeat-us-nepal-record-pe-aeafa1b.html