ஆரோக்கியமான உடல் நலத்துடன் திகழ மக்கள் விரும்புகின்றனர். அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் உணவு கட்டுப் பாடுகளை தேசிய சத்துணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தினமும் குறைந்தது 15 நிமிடம் உடற் பயிற்சி செய்யவேண்டும். அதன் மூலம் உடல் தசைகள் வலுப்பெறும்.
மேலும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். இவை தவிர உணவு கட்டுப்பாட்டு முறைகளையும் அறிவித்துள்ளது. உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் ஆண்கள், தினமும் 200 மி.லி பால் அல்லது 2 கப் டீ மற்றும் காபி சாப்பிடலாம். காலை உணவாக 4 இட்லி அல்லது 3 தோசை சாப்பிடலாம்.
இவை தவிர 1 1/2 கப் உப்புமா அல்லது 4 ரெட்டித் துண்டுகள் அல்லது 2 கப் பாலுடன் கூடிய கார்ன் பிளேக்ஸ் உணவாக எடுத்துக்கொள்ளலாம். பெண்களின் உணவு பழக்கத்தை பொறுத்த வரை ஆண்களின் உணவை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக எடுத்து கொண்டால் நல்லது.
காலை உணவாக 3 இட்லி அல்லது 2 தோசை அல்லது 1 கப் உப்புமா அல்லது 3 ரொட்டி துண்டுகளே சாப்பிடலாம்.மதிய சாப்பாட்டை பொறுத்தவரை ஆண்கள் 2 கப் அரிசி சாதம் சாப்பிடலாம். அதனுடன் 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள், 8 துண்டு வெஜிடபுள் சாலட் மற்றும் 1/2 கப் தயிர் எடுத்து கொள்ளலாம்.
அசைவ உணவு வகையில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை ஒரு சில துண்டுகள் மட்டும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்த வரை 1 கப் அரிசி சாதம் சாப்பிட்டால் போதுமானது. மற்ற படி ஆண்கள் சாப்பிடும் அதே அளவு பொருட்களை சாதத்துடன் சேர்த்து கொள்ளலாம்.
இரவு சாப்பாட்டின்போது ஆண்கள் 2 கப் அரிசி சாதமும், 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள் உண்ணலாம். அத்துடன் 100 கிராம் பழங்களும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்தவரை 1 கப் அரிசி சாதமும், ஆண்களுக்கான மற்ற உணவு வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.மேலும் பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.