Wednesday, July 28, 2010

கூகுளுடன் கைகோர்க்கும் யாஹூ

இணைய உலகின் ஜாம்பவான்களாகிய யாஹூவும் கூகுளும் இன்று ஜபானில் கைகோர்த்துள்ளது. yahoo japan நிறுவனம் தனது தேடுபொறியை கூகிளின் உதவியுடன் இயக்கும் என அறிவித்துள்ளது.
இன்று காலை இந்த அறிவித்தல் வெளியானதாக பல இணைய தளங்கள் உறுதி செய்துள்ளன. yahoo japan நிறுவனமாத்தின் பெரும்பான்மை பங்கினை(40%) Softbank Corp நிறுவனம் கொண்டிருப்பதும் yahoo inc 35% பங்கினை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜபான் சந்தையில் 53% பங்கினை யாஹூ ஜபானும் 35% பங்கினை கூகிளும் கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்த ஒப்பந்தமானது மற்றய அனைத்து தேடுபொறிகளையும் பின்தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.
மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.