Sunday, October 17, 2010

உலகின் மிகப்பெரிய கை

சீனாவின் Jiangsu மாகாணத்தைச் சேர்ந்த Lui Hua என்பவர் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, இவரது கை எலும்புகளும், தசை நார்களும் வழமையான கையின் அளவை விட பெருத்து விட்டது.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஜூலை 2007ல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது இவரது இடது கை பெருவிரலின் அளவு 10.2 (Inches) அங்குலத்துடன், 10Kg நிறையும் கொண்டிருந்தது. இதுவே உலகின் பெரிய கையாக சாதனையும் பெற்றுள்ளது.
இது  குறித்து வைத்தியசாலை அதிகாரி  Chen Zuliang அவர்கள் The Shanghai Daily கருத்துத் தெரிவிக்கையில்,
இது  தான் உலகில் மிகப்பெரிய கை என்பதுடன், இவரது கையின்வளர்ச்சி  கடந்த சில வருடங்களாக  நின்றுவிட்டது. இருந்தாலும், பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் இந்த அவலட்சணமான அமைப்பினை சரி செய்ய முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அவருக்கு 7 மணித்தியால முதலாவது சத்திர சிகிச்சை பின்னர் 11 இறாத்தல் சதையும் எலும்பும் வெட்டி அகற்றப்பட்டது.


முடி சூடும் உலகின் மிக சிறிய மனிதன்.

2010, October ல் தனது 18வது பிறந்த நாளைக்கொண்டாடிய  நேபாளத்தின் மத்திய பிரதேசமான Pokhara வைச் சேர்ந்த  Khagendra Thapa Magar என்பவர் தான் உலகின் புதிய குள்ள மனிதராக முடி சூடவுள்ளார்.
5.5kg (12lb) நிறையும், 67.08cm (2ft 2.41in) உயரமுடைய இவர், தற்போது உலகின் குள்ள மனிதராகவுள்ள கொலம்பியாவைச் சேர்ந்த 24 வயதுடைய  Edward “Nino” Hernandez என்பவரை விட 3Cm உயரம் குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.