Monday, July 26, 2010

மரண வாசலை தொட்டு வந்த விமானி (வீடியோ இணைப்பு)


கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார்.
இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.
இதை இன்னும் என்னால் நம்பமுடியாமல் உள்ளது.இயந்திரத்தில் ‘பொப்… பொப்… பொப்…’ என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.