பத்திரிக்கை உலகின் புது வரவு 3D பத்திரிகை.
ஜேம்ஸ் கமரூனின் அவதார் திரைப்படம் 3D படங்கள் பற்றிய பிரக்ஞையை உலக அரங்கில் வெகுவாக் கிளப்பிவிட்டுள்ளது தெரிந்ததே. இப்போது தொலைக்காட்சிகள் 3D வடிவில் வருகின்றன.
இவற்றில் இருந்து சற்று வேறுபட்டு 3D முப்பரிமாண படங்கள் கொண்ட பத்திரிகைகள் சீனாவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. கடந்த 2009 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில பத்திரிகைகளின் விளம்பரங்கள் முப்பரிமாணத்தில் வருகின்றன. இவற்றைப் பார்ப்பதற்கான கண்ணாடிகளும் பத்திரிகையுடன் சேர்த்தே வழங்கப்படுகிறது.
சிறுவர்களுக்கான சித்திரக் கதைகள், திரைப்பட விளம்பரங்கள் போன்றன பத்திரிகையில் முப்பரிமாண படங்களாக வர ஆரம்பித்திருப்பது பத்திரிகைத் துறைக்கு புதிய பரிமாணத்தையும் விற்பனை வீச்சையும், புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்கிறார்கள் சீனப் பத்திரிகையாளர். இணையத்தின் வரவால் தள்ளாடிய பத்திரிகை, சஞ்சிகைகளின் விற்பனைகள் இனி மறுபடியும் புதுவலு பெற இருக்கின்றன.