அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்களின் ஆடைகளை தெரிவு செய்வதற்காக ஆடையகங்களுக்கு செல்கின்றோம். அங்கே நாம் விரும்பும் ,தெரிவு செய்யும் ஆடைகளை அணிந்து பார்க்க அங்குள்ள இரகசிய அறைகளை உபயோகிக்கின்றோம்.தூர பிரயாணங்களை மேற்கொள்ளும் போது இராப் பொழுதுகளை கழித்துக்கொள்ள விடுதிகளையும்,தமது அவசரத்தேவைகளை நிறைவேற்றிகொள்ள பொது மலசல கூடங்களையும் உபயோகிக்ன்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களிளெல்லாம் பெண்கள், அதிலும் குறிப்பாக இளம் வயதினர் மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
ஏனென்றால்,இன்றைய தொழிநுட்பம் மனிதனுக்கு நன்மைகளை கொண்டு வந்த அதே வேளை, பல்வேறுபட்ட தீமைகளையும்,பாதிப்புக்களையும் கொண்டு வராமல் இல்லை.
அந்த வகையில் தான், இன்றுள்ள இரகசிய காமேரா(Spy Camera) க்களை
மறைத்து வைத்து, மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் அநாகரீகமான முறையில் படமெடுத்து இணையங்களிலும் , கைத்தொலைபேசிகளிலும் அலைய விட்டு அதனை ரசிக்க ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்றது.
எனவே தான், நாம் வீட்டை விட்டு வெளிச்செல்லும் போது எமது ஆடைகளை சரி பார்த்துக்கொள்வதும், மேற்குறிப்பிட இடங்களுக்கு செல்லும் போது அவதானமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இவாறான இடங்களில் பொருத்தக்கூடிய,மிக மிக இரகசியமாக படமெடுக்கூடிய இரகசியக்கமேராகளின் படங்கள் இதோ......
இத்தகவலை முடிந்தவரை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.
நன்றி.Ofnaa-Doha (images)