Wednesday, August 11, 2010

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!


உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.
ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.
அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.
விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.
எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.
Source : tmmk.in
Thanks To.......Anas Mohamed and MM.Mubarack (Both-Doha-Qatar)

ஒரு சாதனை நடைப்பயணம்.


அமேசான் காடுகள் அழியக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு சாதனை நடைபயணம்.
இந்த ஆற்றுக்குள் நடப்பது அவ்வளவு எளிதானதல்ல. கொசுக்கள் , அனகோண்டா, தேள் என பல பூச்சிகள் நிறைந்த ஆறு இது. உலகத்திலேயே பெரிய ஆறான இதை முழுவதுமாக வெற்றிகரமாக கடந்து சென்று வடக்கு பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் எட் ஸ்டேப்போர்ட்.
பெரு நாட்டின் தெற்கு கடலோர பகுதியில் இருந்து 859 நாட்களுக்கு முன்பு தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் 18 அடி நீளமுள்ள முதலைகள், மிகப்பெரிய அனகோண்டாக்கள், உடல்நலக்குறைவு, உணவு பற்றாக்குறை, மரண அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை தாண்டியே இந்த சாதனையை படைத்துள்ளார். 2 ஏப்ரல் 2008 இல் எட் ஸ்டேப்போர்ட்டும் அவர் நண்பரும் இணைந்து நடக்க ஆரம்பித்தனர்.
மூன்று மாதங்களில் அவர் நண்பர் நடப்பதை நிறுத்தி விட்டார். எட் ஸ்டேப்போர்ட் தன்னுடைய நடைபயணத்தை ஆங்காங்கே தான் சந்திக்கும் மனிதர்களின் உதவியுடன் தொடர ஆரம்பித்தார். 5 மாதங்கள் நடந்த பின்னர் பெருவில் உள்ள காடுகளில் பணியாற்றும் ரிவேரா என்பவரும் இவருடன் இணைந்து நடக்க ஆரம்பித்தார். இருவரும் இதுவரை இணைந்து நடந்துள்ளனர்.
செல்லும் வழிகளில் எல்லாம் இவர்கள் சாப்பிட்டது பீன்ஸ் மற்றும் அரிசியினால் ஆன உணவுகள்,. அவ்வப்போது கிடைக்கும் மீன்களையும் பிடித்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த பயணத்திற்காக ஸ்டேப்போர்ட்டுக்கு 63,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது. ஆதரவாளர்கள் அளித்த பணத்தின் மூலமே இதை சரிக்கட்டியுள்ளார்.
நடைபயணம் தொடங்கிய நாள் முதலாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய வலைப்பூவில் இது குறித்த படங்களையும் போட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 34 வயதாகும் எட் ஸ்டேப்போர்ட் முன்னாள் பிரித்தானிய ராணுவ தளபதிகளில் ஒருவர். தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளும் , அமேசான் ஆறும் அழிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி அமேசான் ஆற்றுக்குள் 4000 மைல்கள் நடந்து இன்று சாதனை படைத்தார்.
வீடியோ

புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகும் ‘நிஷான்’ கார்கள்

காரில் பயணிப்போரின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு பல புதிய தொழிநுட்ப அம்சங்களை தமது கார்களில் உள்ளடக்கவுள்ளதாக ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிஷான்’ அறிவித்துள்ளது.
இதன்படி கார்களிலுள்ள குளிரூட்டீகளினூடாக விட்டமின் ‘சி’ யை விசிற உத்தேசித்துள்ளதாகவும் இது பயணிகளின் உடற்தோளினை ஈரலிப்பாகப் பேண உதவுமெனவும் இதன்மூலம் வெளியில் இருப்பதை காரினுள் ஆரோக்கியமாக உணரமுடியுமெனவும் அதன் பொறியியலாளர் தெரிவித்தார்.
உடலினுள் இதனோடு இரத்த ஓட்டத்தை சீர்செய்யக்கூடியதும் முதுகு வலியை குறைக்க கூடியதுமான இருக்கைகளையும் பொருத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நவீனமயப்படுத்தப்பட்டதும் முக்கிய நாட்களை நினைவு கூறக்கூடியதுமான வேகமானிகளையும் பொருத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவற்றிற்கு மேலதிகமாக ‘என்டி கொலிசன்’ எனப்படும் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் ‘ராடர்’’ தொழிநுட்பத்திற்கு இணையான தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது. இத்தொழில்நுட்பமானது விபத்து ஒன்று நிகழக்கூடிய அபாயமிருப்பின் அது தொடர்பாக பயணிக்கு சமிக்ஞைகளை எழுப்பி எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.
அதிக போட்டித்தன்மை கொண்ட கார் சந்தையில் நிஷான் நிறுவனத்தின் இத்தொழில்நுட்பங்கள் அதன் போட்டியாளருக்கு தகுந்த போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.
பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.
பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.
தயாரிப்பது எப்படி?
நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.
இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

ஒரு வாழைமரத்தில் பல பூக்கள்!

ஒரு வாழைமரத்தில் பல பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஒரு அதிசயம் இலங்கையின் நுவரெலியாவில் நிகழ்ந்துள்ளது.
நுவரெலியா மாவட்டம் நானுஒயா வங்கி ஓய கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசய வாழை மரம் காணப்படுகின்றது.
இந்த வாழை மரத்தில் சுமார் 25 வாழைப்பூக்கள் காணப்படுகின்றன. பொதுவாக வாழை மரமொன்றில் ஒரு பூ மாத்திரமே பூக்கும் என்பதே இயற்கை.
ஆனால் இந்த வாழைமரம் பல பூக்களுடன் இருப்பதைப்பார்த்து பிரதேச மக்கள் வியப்படைந்துள்ளனர்.
நன்றி.வீரகேசரி.