Wednesday, July 14, 2010

காராக(கார்) மாறும் மனிதன்

மனிதர்கள் உருவாகிய முதல் சாய்ந்த கோபுரம் (Capital Gate ,Abu Dhabi - )படங்கள்.

மேலும் படங்களுக்கு Click Here......

உலகில் மிகச் சிறிய மிருகங்கள் 7

மிகச் சிறிய நாய்
உயரம் 12 .4 Cm (4 .9Cm )
எடை 1 .4 இறாத்தல் 

Ducky, a yappy short-coat Chihuahua from Charlton (Massachusetts, USA), holds the Guinness World Record for the world's smallest living dog (by height). Ducky succeeds Danka Kordak of Slovakia, a Chihuahua who measured 5.4 inches tall. The smallest dog ever, according to Guinness, was a dwarf Yorkshire terrier who stood 2.8 inches tall. 
மிகச் சிறிய மீன்
நீளம் 7.9 mm (0.3-inch) 
 On January 2006, the world's smallest fish was discovered on the Indonesian island of Sumatra: a member of the carp family of fish, the Paedocypris progenetica. It is the world's smallest vertebrate or backboned animal; only 7.9 mm (0.3 inches) long.
The title, however, is contested by 6.2 mm (0.2 in) long male angler fish Photocorynus spiniceps (not technically a fish but a sexual parasite) and the 7 mm (0.27 in) long male stout infant fish Schindleria brevipinguis.
மிகச் சிறிய குதிரை  
உயரம் 43.18 cm (17-inch) 
The little horse was born to Paul and Kay Goessling, who specialize in breeding miniature horses, but even for the breed Thumbelina is particularly small: she is thought to be a dwarf-version of the breed. At just 60 lb and 17-inch tall, the five-year-old Thumbelina is the worlds smallest horse.
மிகச் சிறிய பூனை
உயரம் 15.5 cm (6.1-inch) 
நீளம் 49 cm (19.2-inch) 
Meet Mr. Peebles. He lives in central Illinois, is two years old, weighs about three pounds and is the world's smallest cat! The cat's small stature was verified by the Guinness Book of World Records on 2004.
மிகச் சிறிய ஹம்ச்ட்டர்(Hamster )
உயரம் 2.5 cm (0.9-inch) 
Only slightly bigger than a 50p piece, Pee Wee is the smallest hamster in the world. Weighing less than an ounce, the golden hamster stopped growing when he was three weeks old - his five brothers and sisters went on to measure between 4in and 5in.
மிகச் சிறிய  பசு
உயரம் 81 cm (31-inch) 
The worlds smallest cattle is a rare breed of an Indian zebu called the Vechur cow. The average height of this breed of cattle is 31 to 35 inches (81 to 91 cm). The photo above shows a 16 year old Vechur cattle as compared to a 6 year old HF cross-breed cow.
மிகச் சிறிய கடற்குதிரை
நீளம் 16 mm (0.6-inch) 
The creature, known as Hippo campus Denise, is typically just 16 millimeters long - smaller than most fingernails. Some were found to be just 13 mm long. H.. Denise lives in the tropical waters of the western Pacific Ocean, between 13 and 90 meters beneath the surface.

கூகுள் சொனி வெப் ரீவி வருகிறது


கூகுள் நிறுவனமும் ஜப்பானிய சொனி நிறுவனமும் இணைந்து கூகுள் சொனி வெப் ரீவி என்ற இணைய தொலைக்காட்சி தேடுதளத்தை வரும் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஆரம்பிக்கவுள்ளன. யூ ரியூப் இணையத்தளத்தில் காணொளிகளை பார்ப்பதைப் போல இந்தத் தேடுதளத்திலும் உலகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் யாவும் இணைக்கப்படவுள்ளன. ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது தொலைக்காட்சி சேவையை கூகுள் பொக்சிற்கு வழங்கினால் அங்கிருந்து அது ஒளிபரப்பாகும். எதிர்கால தொலைக்காட்சியின் தாய்வீடு இணையமே என்ற கருத்தில் இது முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
Thanks To.....Alaikal

படைக்கப்பட்டது ‘செயற்கை உயிரி’.



உலகின் முதல் ‘செயற்கை உயிரி’ என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். கணினி ஒன்றைப் பயன்படுத்தி வெறுமனே நான்கு இரசாயனங்களைச் சேர்த்து கட்டமைக்கப்பட்ட டி.என்.ஏ.வால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒற்றை உயிர்க்கல உயிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
“இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.” என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
விஞ்ஞானி கிரெய்க் வெண்டர்
அவ்வாறு செயற்கை மரபணுக் கட்டமைப்பு செலுத்தப்பட்டவுடன் அந்த உயிரிகள், அந்த செயற்கை மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.
தி சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று வருணிக்கப்படுகிறது.
மருந்தாக செயல்படக்கூடிய, எரிபொருளாக செயல்படக்கூடிய, காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தக்கூடிய வகைகளில் எல்லாம் செயற்கை பேக்டீரியாக்களை உருவாக்கி நாம் பலன் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இயற்கையில் காணப்படும் இந்த பேக்டீரியாவிலிருந்து இந்த செயற்கை பாக்டீரியாவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக செயற்கை பாக்டீரியாவின் மரபணுக் கட்டமைப்பில் அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்கள், அவர்களின் இணையதள முகவரி போன்றவையும் அதிலே சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பையோஎன்ஜினியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பயனுள்ள எரிபொருட்களையும் புதிய தடுப்பு மருந்துகளையும் உருவாக்கக்கூடிய பணி செய்யும் செயற்கை பாக்டீரியாக்களுக்கான மரபணுக் கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே மருந்து உறுபத்தி நிறுவனங்களுடனும் எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களுடனும் சேர்ந்துப் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks To......Alaikal.

சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.

சென்ற வாரம் சாம்சங் (Samsung) நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை மொபைல் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. வேவ் மற்றும் காலக்ஸி எஸ் என அழைக்கப்படும் இந்த போன்களின் விலை முறையே இந்திய ரூ. 19,100 மற்றும் ரூ.31,500 ஆகும். வேவ் மொபைல் போன் சாம்சங் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், காலக்ஸி எஸ் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன.
இந்த போன்கள் "பதா'' வரிசை போன்கள் என அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் "பதா''என்றால் கடல் என்று பொருள். இந்த வரிசையில் அறிமுகப்படுத்தப்படும் போன்கள் அனைத்தும் சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து பல புரோகிராம்களை இயக்கிப் பயன் படுத்தலாம். இன்டர்நெட் மூலமும் இவற்றைப் பெறலாம். இந்த இரண்டு போன் திரைகளிலும் மிக அருமையான அமோலெட் (AMOLED) ) டிஸ்பிளே தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டு, துல்லிதமான காட்சி கிடைக்கிறது.
இவற்றின் ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுவதால், கிராபிக்ஸ் மற்றும் வீடியோ காட்சிகள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இதில் தரப்பட்டுள்ள டச்விஸ் 3 பதிப்பு, போன்களைப் பயன் படுத்துவதனை மிக எளிதாக் குகிறது.
நன்றி,தமிழ் CNN

மோப்பம் பிடிக்கும் செல்போன்…

குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது.இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும். இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’.
இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும்.
அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும்.
பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks To....www.z9tech.com

பிளாஸ்டிகி

பிளாஸ்டிகி எனும் படகு ஒன்று கடந்த 21 .03 .2010 அன்று  தனது 20,000 கிலோமீட்டர் தூர பயணத்தை சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஆரம்பித்தது. இதிலென்ன ஆச்சரியம்? சாதாரண படகுதானே என்று எண்ணிவிடாதீர்கள்.
இது முழுக்க முழுக்க காலியான, வீசி எறியப்பட்ட பழைய பிளாஸ்டிக் போத்தல்களாலானது என்றால் ஆச்சரியமாக இல்லையா?
காலியான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொருட்களால் சமுத்திரங்களில் பாரிய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இது பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு ஒன்று வித்தியாசமான கடல் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
'ரீசைக்லிங் 'என்று சொல்லப்படுகின்ற முறையில் பழைய பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிளாஸ்டிகி.
12000க்கும் அதிகமான போத்தல்களை வரிசை வரிசையாக ஒட்டி ஒட்டி இதுபோன்ற இரண்டு மிதவைகளைக் கொண்ட பாய்மரப் படகுகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மீது ஏறி துணிச்சல்மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு ஒன்று பசிபிக் கடலைக் கடக்கவுள்ளது. இவர்களின் பயணமே கடந்த 21 .03 .2010 அன்று ஆரம்பமானது.
இந்தப் படகுகள் கிட்டத்தட்ட முற்றிலுமாகவே உபயோகப்படுத்தப்பட்டு வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட உபகரணங்களாலானவை.
இவற்றில் பயணிப்பவர்கள் ஒரே நீரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதற்கான வசதியும், உடற்பயிற்சிக்கான சைக்கிளை மிதிக்கும்போது அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் இறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலை ஒட்டி வாழும் பறவைகளையும் கடல் வாழ் உயிரினங்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றுவருகிறன.
தவிர கடலில் விடப்படுகின்ற பிளாஸ்டிக் குப்பைகள் ஒன்று சேர்ந்து பெரும் பெரும் திட்டுக்களாகச் சமுத்திரத்தில் பல இடங்களிலும் மிதந்துகொண்டிருக்கின்றன. இவை ஒன்றாய்ச் சேர்ந்து 'குப்பைத் தீவு' உருவாகியிருக்கும் தகவல்களும் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
நன்றி,வீரகேசரி.

Magic Table

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு.

மைக்ரோ சொஃப்ட்(Microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும்  Tablet PC க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.
இது ஸ்மார்ட்(Smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks To.....www.z9tech.com/