Tuesday, May 25, 2010
அடுத்த தலைமுறை புதிய 4G மொபைல்கள்
நாம் இப்போதுதான் முன்றாம் தலைமுறை தொழில் நுட்பமான 3G மொபைல் அறிமுகத்தில் இறங்கி இருக்கிறோம். அதற்குள்ளாக அமெரிக்காவில் 4G மொபைல்கள் அறிமுகமாகிறது. 3G மொபைலில் முகம் பார்த்து பேசும் வசதி சிறப்புக்குரியது. அதேபோல 4G மொபைல் என்றால் கம்ப்யூட்டர்- இன்டர்நெட் உலகம்தான் சிறப்பு. அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க இந்த தொழில்நுட்பத்தில்தான் இயங்க இருக்கிறது.
அமெரிக்காவின் ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் நிறுவனம் இந்த 4G மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது 4.3 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது. ஐபோன்களைவிட அளவில் பெரியது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. 33GB தகவல்களை சேமித்து வைக்க முடியும். இன்டர்நெட் மையம்போல் செயல்படும் இந்த 4ஜி மொபைலில் ஒரே நேரத்தில் 8 இணையதளங்களை பயன்படுத்த முடியும். விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த மொபைல் போன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி, திருவாரூர்
Subscribe to:
Posts (Atom)