Wednesday, January 5, 2011

 69 வயது கொரிய பெண்ணின் சாதனை.

960 முறை பரீட்சைக்கு தோற்றி சாதனை.
69 வயதுடைய (Cha-Sa-Soon) சா-ச-சூன் என்ற கொரிய பெண்மணி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கு வாகன செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக (4,000,000 Won) சுமார் 3500 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.இவர் தோற்றிய பரீட்சைகள் அனைத்திலும் பரிதாபகரமான முறையில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இறுதியாக, இவரது அயராத முயற்சியின் காரணமாக,கடந்த நவம்பர் 4, 2009ல் நடைபெற்ற பரீட்சையில் 960 வது முறையாக தோற்றி, 100 புள்ளிகளுக்கு 60 புள்ளிகளைப்பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து,  தனக்குரிய வாகன ஓட்டுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தான் தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தில் Yonhap செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த (Cha-Sa-Soon), தனக்கென ஒரு காரை சொந்தமாக வாங்கி தனது பிள்ளைகளின்வீடுகளுக்கு செல்லவும், தனது மரக்கறி வியாபாரத்தை விரிவுபடுத்தவும் எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Anara Tower - Dubai.






Anara Tower, Dubai - Building Information
Client: Tameer Holdings Investments
Facility: Mixed Use: Commercial and residential
Features: A 600m+ high, 100+ storey tower, combining 300 branded apartments, 250 key 5 star hotel, 4 sky gardens, health spa, pool and sports courts.
Size: 470,000 sq m total built up area
Status: Design stage


16 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை.

சீனாவின் Guangdong மாகாணத்தின்  தென்கிழக்கு பகுதியின் Leizhou பிரதேச வைத்தியசாலையில் நவம்பர் 5, 2008 ல் இரண்டு கால்களிலும் மொத்தம் 16 விரல்களுடன் இந்த அதிசயக்குழந்தை பிறந்துள்ளது.

அதே  நேரத்தில், இக்குழைந்தையில் இன்னுமொரு அதிசயம், இரண்டு கைகளிலும் ஐந்தைந்து விரல்களாக மொத்தம் 10 விரல்கள் காணப்படுவதுடன் பெரு விரல்கள் காணப்படவில்லை.

இது குறித்து வைத்தியர்கள் இது பரம்பரை  அல்லது சூழல் தாக்கத்தினால் நிகழ்ந்திருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.