Saturday, March 5, 2011

அமெரிக்காவின் அதிசயம்.


Amazing Technology For Wood Workers


ண்ப் பறவைகள் - 2

















கின்னஸ் உலக சாதனைச்சிறுமி

முகம் முழுவதும் ரோமங்களால் மூடப்பட்ட மனிதர்கள் பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ள  நிலையில், முதல் தடவையாக உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச்சிறுமி ஒருத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 இந்த சுட்டிப் பெண்ணின் முகம்,கைகள்,கால்கள்,காதுகள் என்று உடல் முழுவதும் அடர்ந்த உரோமங்கள் வளர்ந்துள்ளன.
இந்த உரோமங்களை நிரந்தரமாக அகற்ற வைத்திய நிபுணர்கள் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டமை கவலையளிப்பதாக இருப்பினும்,  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றமையை தொடர்ந்து, சுப்ரா  மகிழ்ச்சியில் ஆரவாரிக்கின்றார். முன்பு கேலிகள், நக்கல்கள், ஓரம் கட்டுதல்களுக்குள்ளான இச்சிறுமி  இன்று அந்நாட்டின் கதாநாயகி ஆகி விட்டார்.  சுப்ராவுக்கு ஏற்பட்டுள்ள நோய் உலகில் 50 சிறுமிகளுக்கு உள்ளது என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.