Wednesday, October 9, 2013

மூக்கில் மூளையுடன் அதிசய குழந்தை

(Im)இந்தக் குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதுதான் இதனை அவதானிக்க முடிந்தது. 

மூக்கின் ஊடாக வெளியே இருக்கும் மூளையை பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில் சத்திரசிகிச்சையின் மூலம் வைத்துள்ளனர்.






Wednesday, September 18, 2013

வியந்து போவீர்கள்!

அரேபியாவில் ஆறுகள் இல்லை. 
அத்தி, பலா மரங்கள் பூ பூப்பதில்லை. 
ஆமைக்குப் பற்கள் இல்லை. 
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வு பெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தை மரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.

பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.

ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்துவதில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடு கட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர் காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரை அரங்குகள் இல்லை.

Monday, July 29, 2013

78 பேரின் உயிரை காவு கொண்ட பேஸ்புக்?

(NON) ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர்.
80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான ரயிலில் 2 ஓட்டுநர்கள் இருந்துள்ளனர். இதில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ(வயது 52) என்பவர் ரயிலை ஓட்டிய போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கர்சான் கவனக்குறைவாக

Saturday, July 20, 2013

100 ஆண்டுகளின் பின் சூரிய ஒளியை தரிசிக்கும் 'ருஜூகான்' மக்கள்

(TM) சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது.

நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது.

குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

ருஜூகான் நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிடப் பட்டு வந்தநிலையில், தற்போது சரியான ஒரு மாற்றுத் தீர்வு கண்டறியப் பட்டுள்ளது.

அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.

இத்திட்டம் கடந்த முதலாம் திகதி முதல் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே தற்போது சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.

Saturday, June 22, 2013

சாதனை படைத்த சீனாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

(mypno) அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.

டியானி 2 (Tianhe 2) : இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம், நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச்

Wednesday, June 19, 2013

கூகுளின் புரட்சிகரத் திட்டம் !

பலூன்களை வானில் பறக்கவிட்டு அதனூடாக இணைய வசதியை வழங்கும் திட்டமொன்றை கூகுள் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு ' புரொஜெக்ட் லூன்' என கூகுள் பெயரிட்டுள்ளது.

சுமார் 18 மாத கால முயற்சியின் பலனே இதுவென கூகுள் தெரிவிக்கின்றது. உலகில் இணைய வசதியற்றோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இம்முன்னோடித் திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.


பலூன்களின் இதற்கு தேவையான உபகரணங்களைப் பொருத்தி வானத்தில் பறக்கவிடுவதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் உபகரணங்கள் மூலமாக 3ஜி வேக இணைய வசதியை கூகுள் வழங்க எதிர்ப்பார்த்துள்ளது.

 ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் உயரத்தில் இவை பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ள இத்திட்டத்தை நியூசிலாந்தில் கூகுள் ஆரம்பித்துள்ளது.
 இதன் முதற்கட்டமாக 30 பலூன்களை கூகுள் நியூசிலாந்தின் தெற்கிலுள்ள தீவொன்றிலிருந்து அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பலூனும் சுமார் 1200 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்கு இணைய வசதியை வழங்கக்கூடியது. ஈலியம் நிரப்பப்பட்ட இப்பலூன்கள் இவ்வசதியை வழங்குவதற்கு தேவையான சக்தியை ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இணைய வசதியற்றோருக்கு அதனை வழங்குவது மட்டுமன்றி, அனர்த்த நிலைகளின் போது தொடர்பாடல் சாதனங்கள் துண்டிக்கப்படும் போது இதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் கிளாஸ், ஓட்டுநர் அற்ற கார் போன்ற புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் கூகுளின் 'லெப் x' இலேயே இப் புரட்சிகர திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனூடாக இணையக் கேபிள்களை உருவாக்குதல், அவற்றை பொருத்துதல், பராமரித்தல் போன்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுமென நம்பப்படுகின்றது. உலக சனத்தொகையில் 4.8 பில்லியன் பேர் இணைய வசதியற்றவர்களாக இருப்பதுடன் , 2.2 பில்லியன் பேர் அவ்வசதியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும் இத்திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் இணையவசதியை வழங்க கூகுள் எதிர்ப்பார்த்துள்ளது ஆனாலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இதில் உள்ளன. குறிப்பாக காற்றின் வேகத்திற்கு பலூன்களால் ஈடுகொடுக்க முடியாமல் போதல், இதனால் இணைப்பு இடை நடுவே துண்டிக்கப்படுதல் போன்ற பல காரணிகளையும் கூகுள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு புது முயற்சியைப் போல இதிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. இதிலிருந்து கூகுள் மீளுமா? இத்திட்டத்தில் வெற்றி பெறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி ilangaimuslim.தளத்திலிருந்து...

Friday, June 14, 2013

உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையர்

(JM) உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.  உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, இலங்கையைச்  சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   
 
அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.    இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். 
இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும்.   இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.    இவரையடுத்து உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர். 

Friday, May 10, 2013

மருத்துவ உலகை அதிர வைத்த பிரசவம்!

(IN) ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகளை எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையான முறையில் பிரசவித்து இந்திய பெண்மணியொருவர் மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய மாஹாராஷ்டிரா மாநிலத்தின் , ரயிகாட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தைச் சேர்ந்த சாலு பவார் என்ற பெண்ணே இக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இக்குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.

சாலு பவாரின் கணவர் சாரதி என்பதால் அவரது குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களால் பிரசவத்துக்கென வைத்தியசாலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே வீட்டிலேயே சாகுவுக்கு பிரசவம் நடந்துள்ளது.தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகள் சிசேரியன் மூலமே பிறக்கின்றன.

எனினும் சாலுவின் விடயத்தில் அது பொய்யாகியுள்ளது. எவ்வித மருத்துவ உதவியுமின்றி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார் சாலு.

Tuesday, April 23, 2013

உலகின் மிகப்பெரிய சமாதானப் புறா

1.2 மில்லிய் பொத்தான்களை கொண்டு உலகின் மிகப்பெரிய சமாதான புறா வடிவமைக்கப்பட்டுள்ளது. 

டுபாயில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சமதான புறா கொடியானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கொடியில் உள்ள நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

19x9 மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சமாதான புறா பூஜிப் கலிஃபா வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23-24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது சமாதான மற்றும் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இதன் விழா ஏற்பாட்டுக் குழு இப் பிரமாண்ட சமாதான புறா அடங்கிய கொடியை இவ்விடத்தில் பறக்கவிட்டுள்ளது.

இச்சமாதான புறாவை ஈராக்கின் சிறந்த விளையாட்டு வீரரான பரீட் லப்டா (வயது 33) என்பவரே வடிவமைத்துள்ளார். நல்லெண்ண தூதுவரும் சமாதான பிரசாரகாரருமான பரீத் டுபாயிலுள்ள பாடசாலை சிறுவர்களை இணைத்துகொண்டு இப்புறாவை வடிமைத்துள்ளார்.

மேற்படி விளையாட்டு வீரரை உள்ளடக்கிய குழுவினர் புறாவை வடிவமைக்கும் செயற்பாட்டை கடந்த  2 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர். இதனை முற்று முழுதாக வடிவமைப்பதற்கு 7 நாட்கள் சென்றுள்ளன.

விளையாட்டு மற்றும் சமாதான நிகழ்வு நடைபெறும் தினத்தில் இப்புறாவிற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 22, 2013

ஆறு கால்களுடன் பிறந்த அதிசயக்குழந்தை!

மனிதர்களுக்கு இரண்டு கால்கள் என்பதே வழமை எனினும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட எண்ணிக்கையான கால்களைக் கொண்ட குழந்தைகள் பிறந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு.

இவ்வாறு அண்டையில் ஆறு கால்களுடன் குழந்தை ஒன்று பிறந்து உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் காராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற இக்குழந்தை பிறந்துள்ளது. எனினும் குழந்தை எவ்விதாமன பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக உளள்ளது.


Friday, March 15, 2013

ஒற்றை விரலில் உலகை திரும்பிப் பார்க்க வைத்த மனிதர்-வீடியோ

மும்மொழி பேசும் கிளி!

பிரிட்டனில் கிளியொன்று ஆங்கிலம் உருது அராபி ஆகிய மொழிகளை பேசி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இஷான் மஹமூத் என்பவர் வளர்த்து வந்த 'ரொகேட்' என்று அழைக்கப்படும் ஆண் கிளியே இவ்வாறு பல மொழிகளை பேசும் திறமைமிக்க பறவையாக இருந்து வருகின்றது.

இக்கிளியானது 'ஹலோ, அவ் ஆர் யூ', 'ஆர்க் யான்'  'தே ஆர் இயர்' போன்ற வார்த்தைகளை பேசுவதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ரொகேர்ட்  என்ற இக்கிளியானது எப்போதும் வரவேற்பரையில்தான் இருக்கும். எப்போதும் எம்மை சுற்றியே காணப்படும். அதனால், அது வெவ்வேறான மொழிகளை கற்றுகொண்டது. அது அதிகமான வார்த்தைகளை கற்றுகொண்டது' என இது தொடர்பில் அக்கிளியின் உரிமையாளரான இஷான் மஹமூட் தெரிவித்துள்ளார்.

உருது மற்றும் ஆங்கில மொழிகளை அதற்கு கற்றுகொடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம். அவ்வாறு கற்றுகொடுத்தால் அதனை எமது நிறுவனத்திற்கும் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஷானுடைய தந்தை டாரிக் இந்த கிளியை பாகிஸ்தானில் வளர்த்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதனை பிரிட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்;. 'ஹலோ' , 'ஆர் யூ ஓல்ரைட்', 'பாய்'  ஆகிய ஆங்கில வார்த்தைகளையே ரொகேட் முதலில் பேசியுள்ளது. இதேவேளை, வீட்டில் உள்ள நாய் பூனையை போன்றும் இந்த ரொகேட் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கின்னஸில் இடம்பிடித்த உலகின் வயதான பாட்டி!

 ஜப்பான் நாட்டில் 100 வயதை கடந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். அந்நாட்டின், ஒசாகா நகரில் வாழும் மிசாகா ஒகாவா 114 உலகிலேயே அதிக வயதான பெண் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1898ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி பிறந்த மிசாகா, ஒசாகா நகரின் மருத்துவனை ஒன்றின் பராமரிப்பில் உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் 115வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மிசாகா, உடல்நலத்தில் காட்டிய அக்கறையே தனக்கு நீண்ட ஆயுளை தந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

ஜப்பானை சேர்ந்த 115 வயது ஜிரோமோன் கிமுரா , உலகிலேயே அதிக வயதான தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.




Saturday, March 9, 2013

உலகின் மிகச் சிறிய ஆசிரியர்?

உலகின் மிகச் சிறிய ஆசிரியர் என 3 அடி உயரம் நிறைந்த அசாத் சிங் கருதப்படுகிறார்.

இந்தியா, ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணினித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார்.

அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் 5 வயதாக காணப்படும்போது ஹார்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது. குடும்பத்தின் வறுமைநிலைக்காரணமாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸ் குழுவொன்றினால் தான் சிறுவயதிலே கடத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணினித்துறை கற்பித்தல் ஊடாக இவர் தற்போது மாதம் ஒன்றுக்கு 10,000 இந்தியன் ரூபாய்களை வருவயாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் இவரை 'லிட்ல் ஸ்டார்' என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

'நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் எப்போதும் எதை விரும்பினேனோ தற்போது அதை அடைந்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசாத் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாயார் பார்வதி தெரிவித்துள்ளார்.