Sunday, November 28, 2010

6 கால்கள் மான்

அமெரிக்காவின் Georgia, Everett Springs பகுதியில் நாய்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஆறு கால்களுடன் இந்த அதிசய மான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு வால்களும் இருந்துள்ளது.நாய்களின் தாக்குதலினால் அது சிதைவடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓநாய்ப்பையன்.

பதினோரு வயதுடைய இந்தியாவின் மும்பாய் அருகேயுள்ள சங்காலி மாவட்டத்தின் விவசாயிக்கு பிறந்த ப்ருத்விராஜ் படீல் என்ற சிறுவன் தான் (“Werewolf Syndrome” )  இந்த அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இவனது முகம் மற்றும் உடல் முழுவதும் மயிர் வளர்ந்துள்ளதனால் இவனை ஓநாய்ப்பையன் என அழைப்பதுடன், அப்பிரதேசத்திலுள்ளவர்கள் அவனைச்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும்,சிரிப்பது,கேலி பண்ணுவதுமாகவுள்ளனர்.
சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள இவ்வரிய நோயைக்குணப்படுத்த  பெற்றோர், ஆயுர்வேத,ஹோமியோபதி போன்ற பல்வேறு வைத்தியங்களை மேற்கொண்டும் குணப்படுத்த முடியவில்லை.
தற்போது, உலகிலுள்ள இந்நோய் சம்பந்தமான துறையில் தேர்ச்சி பெற்ற வைத்திய நிபுணர்களின் உதவியை நாடியுள்ளனர்.