Thursday, March 22, 2012

சிறந்த  ஸ்மார்ட்  போன்

 சென்ற ஆண்டில் உலக அளவில் வெளியான ஸ்மார்ட் போன்களில், பல வகைகளில் சிறப்பு பெற்றதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போன் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் உலக மொபைல் கருத்தரங்கில், மொபைல் தயாரிப்பு மற்றும் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுவார்கள். அதே நேரத்தில் சென்ற ஆண்டு சிறப்பாக இயங்கிய மொபைல் போன்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். இந்த விருதுகளை பன்னாட்டளவில் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தேர்ந்தெடுத்து வழங்குகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள் வரிசையில், சாம்சங் கேலக்ஸி எஸ்2 தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டின் சிறந்த சாதனத்தை வடிவமைத்த நிறுவனத்திற்கான விருதும் சாம்சங் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட் போன்களுக்கான தரம், செயல் வேகம், திரை அமைப்பு மற்றும் போனில் தரப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகியவற்றில் புதிய இலக்குகளை எட்டியதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜே.கே. ஷின் தெரிவித்துள்ளார்.
சிறந்த டேப்ளட் பிசிக்கான விருதை, அனைவரும் எதிர் பார்த்தபடி, ஆப்பிள் நிறுவனத் தின் ஐபேட் 2 பெற்றது. இன்றைய நாள் வரை, இந்த பிரிவில் ஐபேட் சாதனத்துடன் போட்டி யிடும் வகையில் எந்த நிறுவனமும் டேப்ளட் பிசியினைத் தயாரிக்கவில்லை. வரும் மாதங்களில், உலகின் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு மொபைல் உலகைக் கலக்கப் போகின்றன.

மனிதர்கள்

மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.
வளர்ந்த பிறகோ, குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா' என்று ஏங்குகிறார்கள்.
பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.
பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு படுகிறார்கள்.
எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை, எதிர் காலத்திலும் இல்லை.
அவர்கள் வாழும்போது, சாகப் போவதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.
சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல வாடுகிறார்கள்.