Thursday, January 27, 2011

24 மணி நேரத்தில் மனிதனில் ...........

1) இதயம் 1,03,689 தடவைகள்  துடிக்கிறது.
2) சுவாசப்பை  23,045 தடவைகள் சுவாசிக்கிறது.
3) இரத்த ஓட்டம்  16,80,000 மைல் தூரம் நடைபெறுகிறது.
4) நகங்கள்  0.00007 அங்குலம் வளர்கிறது.
5) தலை மயிர் 0.01715 அங்குலம் வளர்கிறது.
6) 2.9 இறாத்தல் நீர் அகத்துறிஞ்சப்படுகிறது.(சகல திரவங்களிலிருந்தும்)
7) 3.25 இறாத்தல் உணவு உடலில் சேர்க்கிறது.
8) 438 கன அடி  மூச்சுக்காற்று விடப்படுகிறது.
9) 85.60%  உடல் வெப்பநிலை இழக்கப்படுகிறது.
10) 1.43 பைன்ட் வியர்வை  உற்பத்தி செய்யப்படுகிறது.
11) 4,800 வார்த்தைகள் பேசப்படுகின்றன.
12) தூக்கத்திலிருக்கும் போது  25 தடவைகள் உடல் நகர்கிறது.

அதிசயம் - தாயின் கரு குழந்தையின் வயிற்றில்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன் இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தைக்கு பிறந்தது முதலே வயிறு வீக்கமும் மூச்சுத்திணறலும் இருந்துவந்தது. மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
சோதனை செய்ததில், குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. முதலில் நீர்க்கட்டி என்றும் புற்றுநோய்க் கட்டி என்றும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தனர்.
 அப்படி எதுவும் இல்லை என உறுதியானதும் அந்தக் கட்டியை அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவுசெய்தனர். அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அகற்றப்பட்ட கட்டியானது, 14செமீ அகலத்துக்கு 12 செமீ உயரமாக இருந்தது. அது இன்னொரு கருவைப்போல இருந்தது. தண்டுவடம் தவிர கை விரல்கள், தலைமுடி ஆகியன அதில் இருந்தன. இந்தத் தாய்க்கு, இரட்டைக் கரு உருவாகி, அதில் ஒன்று உருவானவுடனேயே இன்னொரு கருவுக்குள் போய்விட்டது; ஐந்து லட்சத்தில் ஒன்றுதான் இதுபோல ஏற்படும் என்று அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் மூத்த மருத்துவர் முத்துக்குமார் தெரிவித்தார்.
நன்றி - வணக்கம் இணையம்.

Amazing Acrobat