50 மாடி, 100 மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம்.
விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட்
அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து
வருகிறார்கள். ஸ்டீலைவிட 20 மடங்கு உறுதியான கார்பன் நானோ
டியூப் பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு
பிரமாண்ட போஸ்ட் நட வேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா தளம் அமைக்கப்படும். போஸ்ட்டின் உச்சிக்கு லிப்ட்டிலேயே போகலாம். இந்த லிப்ட் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு
நேரத்தில் 30 பயணிகள் சென்று வர முடியும்.
ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினால்,
2050-ம் ஆண்டுக்குள் விண்வெளி லிப்ட்
ரெடி என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார் ஆய்வு நிறுவனத்தின் தலைவி ஒபயாஷி.