தென் கொரியாவின் ஹன்
(Han River ) ஆற்றுக்கு மேலாக இடப்பட்டுள்ள பன்போ
(Banpo Moonlight Rainbow Fountain) பாலமானது உலகின் மிக நீளமான வானவில் பாலமாக கின்னஸ் உலக சாதனைபுத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
கடந்த
2009 ல்
1,140m நீள பாலத்தின் இரு பக்கத்திலும் சுமார் 10,000 LED நீர் பாய்ச்சும் குழாய்கள் பொருத்தப்பட்டு பாலம் அழகு படுத்தப்பட்டது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இக்குழாயிகளினூடாக நிமிடத்திற்கு 190 தொன் ஆற்று நீர் தொடர்ச்சியாக பாய்ச்சப்படுகிறது.
43 மீற்றர் தூரத்திற்கு கிடையாக வானவில் நிறத்தில் நீர் பீச்சப்படும் காட்சி கண் கொள்ளா காட்சியாகும்.இது வார நாட்களில் தினமும் பி.ப 12:30 , பி.ப 3.00, பி.ப 8.00, பி.ப 8:40 , மற்றும் பி.ப 9:20 க்கும், வார இறுதி நாட்களில் பி.ப 5.00, பி.ப 10.00 க்கும் இயக்கப்படுகின்றது.
கொரிய தலை நகர மேயர் Oh Se-hoon, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த வானவில் பாலத்தினால் நகரே அழகு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
(Location: Express Bus Terminal Subway Station and getting out of exit number 8-1, the exit for Banpo Bridge)