Sunday, July 11, 2010

மிகப் பெரிய வைரம்.



பன்னா சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் கண்டெடுப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா வைர சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்படுள்ளது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும் என்று தேச கனிம மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
“2005ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதை விட மிகப் பெரிய, இதுவரை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரிய வைரம் இது. அளவில் மட்டுமின்றி, தரத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது” என்று கூறிய தே.க.மே.கழக்கத்தின் திட்ட மேலாளர் சி.இ. கிந்தோ, அதனை 34.37 காரட் வைரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
65 ஆண்டுக்கால வைர சுரங்க கண்டெடுப்புக்களில் இதுவே மிகப் பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வைரம் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று கூறியுள்ளனர்.
பன்னா வைர சுரங்கம், தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க சுரங்கமே உலகின் பல பெரிய வைரங்களை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks To...Alaikal.

முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம்.

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும். 'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக
 Tamilcnn இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் 
 http://தளம்.தமிழ்சிஎன்என்.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.
அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது, "ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை.
இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது. இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.
Thanks To..TamilCNN

Facebook புதிய வைரஸ் : எச்சரிக்கை

Koobface என்ற புதிய வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது.Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.
You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும்.
கம்ப்யூட்டர் பயனாளர்கள் சந்தேகத்துக்கிடமான எந்த இணைய தள முகவரியையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Thanks To......www.z9tech.com

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர்.

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் தென் கொரியாவில் கைது.
 தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை ஒன்றிருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை.
தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்குச் சென்று ஒன் லைனில் விளையாடுவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்கள் தங்களையே மறந்து விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளைக் கூட மறந்து விடுவதும் உண்டு.
தங்களையே மறந்து விளையாடும் இவர்கள் பெற்ற குழந்தையை மட்டும் நினைவு வைத்திருப்பார்களா? அதனையும் மறந்து விட்டனர்.
குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். சம்பவத்தன்று ஒன்லைனில் ஆடிய விளையாட்டில் தங்களையே மறந்து விட்டனர்.
இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்து போனது. இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது.
கவிபோன் நகர பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால்அது இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்தத் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Thanks To...Virakesari.

2010இன் உலக பணக்காரர் வரிசை

2010இன் உலக பணக்காரர் வரிசையில் கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தில்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 53.5 பில்லியன் டொலராகும்.
உலக கோடீசுவரர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2010ஆம் ஆண்டுக்கான உலக கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவன அதிபர் கார்லஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2ஆவது இடத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் இருக்கிறார். அவரது மொத்த சொத்து 53 பில்லியன் டொலராகும். அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் வாரன் பப்பட் 47 பில்லியன் டொலர் மதிப்பு சொத்துக்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முக்கேஷ் அம்பானியும், லட்சுமி மிட்டலும் இடம் பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி 4ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29 பில்லியன் டொலர்.
5ஆவது இடத்தில் இரும்பு தொழிலில் கொடிகட்டி பறக்கும் லட்சுமி மிட்டல் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டொலராகும்.
அமெரிக்காவின் லோரன்ஸ் எலிசன் (28 பில்லியன் டொலர்) 6ஆவது இடத்திலும், பிரான்சின் பெர்னாட் (27.5 பில்லியன் டொலர்) 7ஆவது இடத்திலும், பிரேசில் நாட்டின் இகி படிஸ்டா (27 பில்லியன் டொலர்) 8ஆவது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் அமன்சியோ (25 பில்லியன் டொலர்) 9ஆவது இடத்திலும், ஜெர்மனியின் கார்ல் அல்பிரசட் (23.5 பில்லியன் டொலர்) 10ஆவது இடத்திலும் உள்ளனர்.
Thanks To....Virakesri.

டைட்டானிக் 100 ஆவது ஆண்டு

2012 இல் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆவது ஆண்டு நிறைவு.
 எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆந் திகதி டைட்டானிக் கப்பல் மூழ்கி 100ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.
இதனை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் படத்தை 3டி படமாக மாற்றித் தருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கமரூன். உலகம் முழுக்க இதே தினத்தில் டைட்டானிக் 3டி வெளியாகிறது.
11 ஆஸ்கர் விருதுகள் மற்றும் 1.8 பில்லியன் வசூல் என உலக அளவில் பல சாதனைகள் படைத்த படம் டைட்டானிக். இதனை ஜேம்ஸ் கமரூனே தயாரித்து இயக்கினார். 1997ஆம் ஆண்டு டிகேப்ரியோ கேன் வின்ஸ்லெட் நடித்து வெளியான இந்தப் படம் ஆசிய நாடுகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இதுகுறித்து கமரூன் கூறுகையில்,
"முப்பரிமாணத்தில் டைட்டானிக் படத்தை மாற்றும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன். அதனுடன் அசல் டைட்டானிக் கப்பல் கடலுக்குள் சிதைந்த நிலையில் இருக்கும் காட்சிகளும் இடம்பெறும். ஆனால் 'அவதார்' அளவுக்கு தத்ரூபமான 3டி பதிப்பு இந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை" என்றார்.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி இந்தக் கப்பல் அட்லாண்டிக் கடலில் 2,223 பயணிகளுடன் மூழ்கியது. அதில் 1,517 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய அந்தக் கப்பலை, கடலுக்குள் நேரில் போய் ஆய்வு செய்து ஓர் அற்புதமான காதல் கதையுடன் தத்ரூபமாக தந்திருந்தார் கமரூன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Very Long Train

In Dallas, Texas. A massive 3.5 mile long train made the journey from Texas to California. It's moments like these you hate level crossings with a passion.