Sunday, November 21, 2010

ஐந்து கால் கன்றுக்குட்டி

Hat Juggling Superb Performance

12 மீற்றர் நீளமான மனித எலும்புக்கூடு .

12 மீற்றர் நீளமான மிகப்பெரிய மனித எலும்புக்கூடொன்று மேற்கு இந்தியாவின் பாலைவனைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்துக்கு சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது இந்திய புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் காடுகளில் வாழ்ந்த Rakshasas என்ற அரக்கனுடைய எலும்புக்கூடாக இருக்கலாமென நம்பப்படுகிறது.




பல் குத்தும் குச்சிகளைக்கொண்டு அருமையான கட்டட வடிவமைப்பு.

நியூ யோர்க்கைச்சேர்ந்த  ஸ்டைன் மென்றோ (Stain Monro) என்பவர் பல் குத்த உதவும் குச்சிகளைக்கொண்டு உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கட்டடங்களை அருமையாக வடிவமைத்துள்ளார். இவர் இத்துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மிகவும் சிறிய குச்சிகளைக்கொண்டு இவ்வாறன கட்டட அமைப்புக்களை உருவாக்குவதென்பது சிரமம் நிறைந்தததாகும்.











Amazing Choreography

நூறு அடி கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சிறு காயங்களுடன் மீண்ட அதிசயம்!

ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் பிளாரஸ் பகுதியில் மூன்று வயது குழந்தையொன்று 100 அடி ஆழமான தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீழ்ந்தது.வெனசா மமானி என்ற இந்தக் குழந்தை வீழ்ந்த கிணறு விவசாயிகளால் பாவிக்கப்படும் 14 அங்குலங்கள் மட்டுமே அகலமான கிணறாகும்.
இதில் யாரும் விழுந்தால் மீட்டெடுப்பதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். குழந்தை விழுந்த தகவல் கிட்டியதும் பொலிஸார் தீயணைப்புப் படையினர் என 200 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் அங்கு விரைந்தனர் உள்ளே யாரும் இறங்க முடியாது அந்தளவு கிணறு ஒடுக்கமானது.
உள்ளே ஒரு கயிறு போடப்பட்டது. அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு குழந்தை மேலே வருமா? அதுசம்பந்தமான அறிவுறுத்தல்களை குழந்தையால் பின்பற்றமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் வேறு வழியில்லை.
இதற்கிடையில் அங்கு ஊடகங்களும் வந்து சேர்ந்துவிட்டன. விஷேட கேபிள் வழியாக கெமராக்களும் கிணற்றுக்குள் அனுப்பப்பட்டன. படப்பிடிப்பும் நடந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேர தீவிரப் போராட்டத்தின் பின் அந்த அதிசயம் நடந்தது.
குழந்தை வெனசா மமானி எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு மேலே வந்தது. உள்ளே அனுப்பப்பட்ட கயிறு குழந்தையின் மார்பைச் சுற்றிக் காணப்பட்டது.
அழுது கொண்டு வெளியே வந்த குழந்தையின் உடலில் சிறு கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்டன. இருந்தாலும் குழந்தை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
நன்றி-அதிரடி.
and அன்சார் முஹம்மது.