Thursday, May 27, 2010

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்



சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த தம்பதி சங்கரன்&அமுதா. இவர்களின் மகன் சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். சிறு வயதில் இருந்தே மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்டவர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலாந்தில் உள்ள சோ யூ, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமன்ஞாரோ ஆகிய சிகரங்களில் ஏற்கனவே ஏறியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, உலகிலேயே மிக உயரமான இந்தியாவின் எவரெஸ்ட் சிகரத்தையும் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டார். மார்ச் 29ம் தேதி, சென்னையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். காத்மண்டுவில் இருந்து 30ம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை தொடங்கி, மே 23ம் தேதி சிகரத்தின் உச்சியை அடைந்தார். சிகரத்தின் உச்சியில் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் வைத்தார்.

இதன் மூலம் ‘எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்’ என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார்.

சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சந்தோஷ்குமார் இறங்கிக் கொண்டு இருக்கிறார். நாளை (28ம் தேதி) அவர் காத்மண்டு வந்துவிடுவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

எட்டு உலக சானைகளுக்கு சொந்தக்காரர் - பரீத் நசீர் காலமானார்.


எட்டு உலக சானைகளுக்கு சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட பரீத் நசீர் 24 .05 .2010 ல் தனது 56 வது வயதில் புத்தளத்தில் காலமானார்.இன்னாலில்லாஹி...
வேக நடை, யாழ்ப்பானத்திலிருந்து ஹம்பாதோட்டைக்கு துவிச்சக்கர வண்டியை பின் புறமாக ஓட்டியமை, 500 நச்சு பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக பந்தைத்தட்டி சாதனை படைத்தமை, ௩ நாட்களாக தொடர்ச்சியாக ஒற்றைக்காலில் நின்றமை போன்ற சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.
இது தவிர பூல் டூம் நடனம்,நான்கு நாட்களாக தொடர்ச்சியாக நடனம்,௭௨ மணித்தியாலங்களாக கை கோர்த்து நடனம் ஆடியமை ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
இவரின் மகானான உலக சாதனையாளரான கடந்த வருடம் ஜூலை மாதம் 23ம் திகதி உலக சாதனையொன்றை மேற்கொண்டிருந்த வேளை விஷப்பாம்பு தீண்டி மரணமானார். இன்னாலில்லாஹி...
இவரது இன்னொரு மகனும் உலக சாதையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி,www.tamilwin.org

தென்கொரியாவில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட வடகொரிய பெண் உளவாளி


வடகொரியாவை சேர்ந்தவர் கிம் (36). பெண் உளவாளி. இவர் தென் கொரியாவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் அவசர காலங்களில் பயன் படுத்தப்படும் சுரங்க பாதைகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அறிந்த தென் கொரிய அதிகாரிகள் பொறி வைத்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர்.

தகவல்களை சேகரிக்க தென்கொரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் “செக்ஸ்” லீலையில் ஈடுபட்டு இருக்கிறாள். இந்த தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவள் சீனா மற்றும் லவோஸ் வழியாக தென் கொரியாவுக்குள் நுழைந்து, ஆன்லைன் மூலம் சுரங்கப்பாதை ஊழியர் ஒருவருடன் காதல் நாடகமாடி அவரை சீனாவுக்கு வரவழைத்து இருக்கிறாள்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் மூலம் தென் கொரியாவுக்குள் நுழைந்து தனது உளவு வேலையில் ஈடுபட்டாள். இந்த தகவலை தென்கொரியா அதிகாரி ஓசென்-இன் தெரிவித்துள்ளார்.

நன்றி,www.z9world.com

தங்கத்தை பெற்றுக் கொள்வதற்கான “ஏ.டீ.எம்." இயந்திரம்

தங்கத்தை பெற்றுக் கொள்வதற்கான “ஏ.டீ.எம்." இயந்திரம்

தங்கம் விநியோகிக்கும் “ஏ.டீ.எம்" இயந்திரமொன்றை துபாய், அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஹோட்டலொன்று ஆரம்பித்துள்ளது.“எமிரேட்ஸ் பலஸ்" ஹோட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த இயந்திரத்தில் தங்கத்தின் நாளாந்த விலையை வாடிக்கையாளர்கள் அவதானிக்க முடியும். அத்துடன் தேவைக்கேற்ப 10 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளையோ நாணயங்களையோ பெற்றுக் கொள்ளவும் முடியும்.
ஜேர்மனிய தொழில் முயற்சியாளரான தோமஸ் கியஸ் லர் என்பவரின் திட்டத்தின் பிரகாரமே இந்த “ஏ.டீ.எம்." இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,245 டொலருக்கும் அதிகமான விலைக்கு உயர்ந் துள்ள நிலையில், தங்க வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Thanks To.....www.z9world.com