ஒரு மாதத்துக்கு 32 ஆயிரம் Barbie பொம்மைகள் பாவிக்கப்பட்டு வீசப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் பாவனைக்குதவாத 460,000 கையடக்க தொலைபேசிகள் அமெரிக்காவை சென்றடைகின்றன.
ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 2 மில்லியன் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் அமெரிக்கர்களால் அருந்தப்படுகின்றன.
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும் 106,000 தகரப்பேனிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அமெரிக்கர்கள் அருந்துகின்றனர்.
ஒவ்வொரு 5 செக்கன்களுக்கும் 60,000 பிளாஸ்டிக் பைகள் பாவிக்கப்படுகின்றன.
ஒரு மணித்தியாலத்துக்கு 1,14 மில்லியன் காகிதப் பைகள் அமெரிக்க சந்தைகளில் பாவிக்கப்படுகின்றன.
ஒரு வருடத்துக்கு 101 மில்லியன் பல் குத்த உதவும் குச்சிகள் பாவிக்கப்படுகின்றன.
அமெரிக்க விமானங்களில் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் (Plastic Cup) கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் 11,000 விமானப்பயணங்கள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு 12 மணித்தியாலங்களுக்கும் 38,000 கொள்கலன்கள் கையாளப்படுகின்றன.
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 28 000 160 லீற்றர் எண்ணெய் பரல்கள் பாவிக்கப்படுகின்றன.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற வலியினைப் போக்குவதற்காக வருடமொன்றுக்கு 213000 Vicodin மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 200,000 சிகரட் (Packets)பக்கட்டுக்கள் புகைக்கப்படுகின்றன.
2004 ம் ஆண்டு 29,596 பிஸ்டல் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2005 ல் 2.3 மில்லியன் சிறைக்கைதிகளுக்கான உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2007 ல் ஈராக் யுத்தத்துக்காக ஒரு மணித்தியாலத்துக்கு செலவான தொகை 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஒவ்வொரு நாளும் 10,000 நாய்.பூனைகளுக்கான கழுத்துப்பட்டிகள் பாவிக்கப்படுகின்றன.