Tuesday, July 13, 2010
கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் 6
புதிய முறையில் கூகுள் தேடுதல்.
சர்ச் இஞ்சின் என்னும் தேடுதல் சாதனத்தை வடிவமைத்து அதன் பயன்பாட்டை பல பரிமாணங்களில் தந்து புகழ் பெற்றிருக்கும் கூகுள் நிறுவனம் அண்மையில் தேடுதல் வகையில் இன்னும் இரண்டு வசதிகளை அண்மையில் இணைத்துள்ளது.
முதலாவதாக தேடும் பொருளை உணர்ந்து அது சார்ந்த தளங்களைச் சேர்த்துத் தருதல். இதனால் தேடுதல் முடிவுகள் இன்னும் நெருக்கமாக நாம் எண்ணித் தேடும் பொருளைக் கொண்டுள்ள தளங்களைக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Semantic Web என கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பம் நம் தேடுதல் கேள்வியுடன் இணைந்த பொருள் கொண்ட தளங்களையும் தருகிறது. எடுத்துக் காட்டாக “principles of physics” என்று தேடுதலுக்கான சொற்களைத் தந்தால் இந்த சர்ச் இஞ்சின் “angular momentum,” “special relativity,” “big bang”மற்றும் “quantum mechanics” போன்றவை இதனுடன் சேர்ந்த கோட்பாடுகள் என்பதனை உணர்ந்து அவை குறித்த தளங்களையும் தருகிறது.
கூகுள் சர்ச் இஞ்சின் மற்ற நிறுவன சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மிக வேகமாகத் தகவல்களைத் தேடித்தருவதில் பெயர் பெற்றது. ஆனால் இது போன்ற கேள்விகள் சார்ந்த கோட்பாடுகள் உள்ளவற்றையும் தேடுதலுக்கு உட்படுத்தினால் நேரம் சற்று அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்கான தொழில் நுட்பத்தினை இன்னும் நுட்பமாக வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவர் ‘Barack Obama’என்று கொடுத்தால் உடனே அப்பெயர் சார்ந்த தளங்களை எளிதாக சர்ச் இஞ்சின் தந்துவிடும். ஆனால் என் கண் அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன மருந்து சாப்பிட வேண்டும்? என்ற கேள்வியைக் கேட்டால் அதனைப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் சர்ச் இஞ்சின் நுண் ணிய தொழில் நுட்பத்தையும் பின் அதன் அடிப்படையில் வேகமாகத் தேடும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் முதல் வெற்றி பெற்று இன்னும் அதனைச் சீராக்கும் முயற்சியில் கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இரண்டாவதாக வந்துள்ள ஒரு வசதி தேடுதல் குறித்த விளக்கத்தினைச் சற்று அதிகமாகத் தருவது. இப்போது முடிவுகள் தெரிவிக்கப்படுகையில் முதலில் ஒவ்வொரு முடிவும் நீல நிறத்தில் சற்று அழுத்தமான எழுத்துக்களில் தளம் தரப்பட்டுப் பின் அது குறித்த விளக்கம் தரும் டெக்ஸ்ட் இணைக்கப்படுகிறது. இந்த டெக்ஸ்ட் இணைப்பை “snippet” எனக் கூறுகிறோம். இதன் மூலம் அந்த தளம் கூறும் செய்தி என்ன என்று தெரிந்து கொள்கிறோம். இனி தேடுதல் கேள்விகளில் மூன்று சொற்களுக்கு மேல் இருந்தால் இந்த விளக்க டெக்ஸ்ட்டிலும் அதிக வரிகள் இருக்கும். தேடுதல் கேள்விகளின் பொருளை உணர்ந்து தளங்களை கூடுதல் விளக்கங்களுடன் தேடித் தருவதில் இன்னும் ஒரு சிக்கலும் உள்ளது.
ஒருபுறம் சர்ச் இஞ்சின் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே தருவது என்ற நோக்கம் இருந்தாலும் தளங்களின் காப்பி ரைட் உரிமையை மீறாமலும் முடிவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வகையிலும் கூகுள் மிகக் கவனமாகத் தன் தொழில் நுட்பம் அமைய வேண்டும் என முயற்சிகளை எடுப்பதாக அந்நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வகை தேடுதல் உலகின் 37 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
Thanks To....Senthilvayal.

2010 கோல்டன் ஷு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கால்பந்து வீரராக உருகுவேயின் டீகோ ஃபோர்லானும், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மகுடத்திற்கு ஜெர்மனி வீரர் முல்லரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியி்ல் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.
உருகுவே - ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால், மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.
இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார். மற்றவர்கள் தலா ஒருமுறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன் ஷூ விருது முல்லருக்குக் கிடைத்தது.
இது தவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது
2006-ம் ஆண்டு போட்டியில் ஜெர்மனியின் குளோஸுக்கு கோல்டன் ஷு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Thanks To....Lankasri
Subscribe to:
Posts (Atom)