48 மணி நேரத்தில் 3 மில்லியன் ஐபேட்கள் விற்று ஆப்பிள் சாதனை!
எலக்ட்ரானிக் சாதன உலகில் ஆப்பிள் நியூ ஐபேட் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மார்ச் 16 தேதி விற்பனைக்கு வந்த ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட் 2 நாட்களில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
வருகிற மார்ச் 23-ஆம் தேதி நியூ ஐபேட் டேப்லட், மற்ற 25 நாடுகளிலும் வெளியாகும். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், ஜெர்மெனி போன்றநாடுகளில் நியூ ஐபேட் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்தம்பிக்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் ஒன்று இந்த நியூ ஐபேட் டேப்லட்டில் இருக்கிறது. இதன் ரெட்டினா டிஸ்ப்ளே என்ற பிரத்தியேகமான தொழில் நுட்பம் ஒன்று இதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இதில் உள்ளதால் எதையும் நேரில் பார்ப்பது போன்ற துல்லியத்தினை வெகு சுலபமாக பெறலாம்.
நியூ ஏ5எக்ஸ் சிப், குவாட் கோர் கிராஃபிக்ஸ், 5 மெகா பிக்ஸல் ஐசைட் கேமரா, 1080பி உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட வீடியோ என்று இதன் வசதிகள் ஏறாலம். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான இந்த ஆப்பிள் நியூ ஐபேடில், வைபை மற்றும் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் தொழில் நுட்பமும் உள்ளது.
வைபை தொழில் நுட்பத்தினை கொண்ட நியூ ஐபேட் டேப்லட்டை வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் பெறலாம். 16ஜிபி நியூ ஐபேட் மாடலை அமெரிக்காவில் ரூ.24,907 விலையிலும், 32ஜிபி மாடலை ரூ.29,899 விலையிலும், 64ஜிபி மாடலை ரூ.34,896 விலையிலும் பெறலாம்.