Saturday, January 14, 2012

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை!

புற்று நோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியன்: புற்று நோயை பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதில், கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது.இந்த கதிர்வீச்சு சிகிச்சைகள் தினமும், 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படும். ஆனால், தற்போது வந்திருக்கும், "ரேபிட் ஆர்க்' சிகிச்சையின் மூலம், முன்பை விட பல மடங்கு துல்லியமாகவும், வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சை,"லினாக்' இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளிக்கு, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்த பின், நோயின் தன்மை, நிலை ஆகியவற்றை கண்டறிந்து, நோயாளிக்கு, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சையைத் தொடங்குவோம்.நோயாளியை,"லினாக்' இயந்திரத்தின் கீழே படுக்க வைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல், பிடித்துக் கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக் கொண்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்பட்டு, கதிர் வீச்சு மூலம் அழிக்கப்படும். முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து, கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால், புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சை மூன்றே நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். இது தவிர, "ஸ்கேட்டரிங்' எனும் கதிர்வீச்சு சிதறலும், மிகக் குறைவான அளவிலேயே இருக்கும். இது போன்ற காரணங்களால், நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்புண்டு. மிகக் குறுகிய நேரத்தில், துல்லிய மாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால், நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லை!
Thanks To Payanulla Thakavalkal.