Monday, June 27, 2011

Skype To Facebook

 ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.
இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.
நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.
Thanks To Lankasri.

மிதி வண்டிகள்.

 முப்பது வயதிலேயே சர்க்கரை வியாதி, நாற்பது வயதில் மாரடைப்பு என இளைய மற்றும் நடுத்தர வயதினரின் ஆரோக்கியமும் ஆயுளும் கீழ்நோக்கிச் செல்லக் காரணம் போதிய உடற்பயிற்சியின்மையே!
இப்போதைய அவசர யுகத்தில் நேரத்தைச் சேமிப்பதற்காக இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. விளைவு, நேரம் சேமிக்கப்படும் அதேவேளையில் உடல் ஆரோக்கியம் உதாசீனப்படுத்தப்படுவதை ஏனோ நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
 கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னமும்கூட விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட உடலுழைப்பு, நடந்தே செல்லும் மனோபாவம், மாசற்ற சுற்றுச்சூழல் ஆகியவற்றால் தங்கள் உடல் ஆரோக்கியத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நகர்ப்புற மக்களோ குறிப்பாக இளைஞர்களோ கல்லூரி, நிறுவனங்களில் உடலுழைப்பற்ற பணி, படிப்பு, பின்னர் கணினி அல்லது தொலைக்காட்சி முன்னர் தவம் என மூளை உழைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்குக் கொடுப்பதில்லை. குறிப்பாக, இரு சக்கர வாகன உற்பத்தி அசுர வேகத்தில் ஆரம்பிக்க, சென்ற தலைமுறையினர் வரை ஆரோக்கியத்தின் பிரதான காரணிகளுள் ஒன்றான மிதிவண்டியை ஓட்டுவதென்பது இப்போது அபூர்வமாகி வருகிறது.
 சென்னை நகர மக்களில் 1970-ல் 21.3 சதவீதமாக இருந்த மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை 2005-ல் 12.8 சதவீதமாகக் குறைந்து போனது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக மேலும் குறைந்திருக்கவே வாய்ப்புண்டு. ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளம் என ஆர்வமுடன் செல்லும் இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத அதேசமயம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும் மிதிவண்டிகளை ஓட்ட முன்வர வேண்டும்.
 எல்லாம் சரிதான், சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலில் இலகுரக, கனரக வாகனங்களுக்கு இடையில் மிதிவண்டி ஓட்டுவது எந்த அளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவின் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் மிதிவண்டிகள் ஓட்டிச் செல்வதற்கென்று சாலைகளில் தனியாக பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில இடங்களில் மாநகராட்சியினர் மிதிவண்டிகள் செல்வதற்கான பாதைகள் ஒதுக்கியிருப்பது ஒரு நல்ல ஆரம்பம். மிதிவண்டிகள் செல்வதற்கான இதுபோன்ற பாதைகளை நகரெங்கும் அமைக்க முன்வர வேண்டும்.
 மிகுதியான மிதிவண்டிகளின் பயன்பாடு புகை, தூசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் என்பதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடித்தளம் அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.