Friday, June 18, 2010

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் 2


கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

* வண்ண லேபிள்கள் (Colored labels) :இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.

* குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.

* புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

* இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.


* மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.

அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது
நன்றி,எதிரி

ஜோர்ஜியாவில் இராட்சத கோழி முட்டை

வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு கோழி இராட்சத முட்டை ஒன்றை இட்டுள்ளது. ஜோர்ஜியாவில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முர்மான் மொடெபாட்ஸா என்பவர் தம் வீட்டில் வளர்த்து வந்த கோழியே இந்த இராட்சத முட்டையை இட்டுள்ளது.
இதன் நீளம் 82 மிமீ( 3 1/4 அங்குலம்), அகலம் 62மி.மீ. (2 1/2 அங்குலம்), நிறை 170 கிராம்(6 அவுன்ஸ்).
முர்மானின் குடும்பத்தினர் இந்த இராட்ச முட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்காகக் கையளித்துள்ளனர்.
நன்றி,www.z9tech.com

பாம்பும் பச்சிளம் குழந்தையும்

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிரமிட்


ஆயிரக்கணக்கான அபூர்வங்களை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் பிரப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும்.பலன்களும் அதே அளவு இருப்பது தான் அதிசயம்.
''பிரமிட்டை ஆராயக்கூடிய எவருக்குமே தோன்றக்கூடிய ஒரே எண்ணம் நிச்சயமாக இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க முடியவே முடியாது. பின் யாராக இருக்க முடியும்? ஜின்களாக இருக்க முடியுமோ என்று தோன்டுகிறதா? ''இருக்கலாம்'' என்று சொல்வதை விட ஆம் என்று சொல்வதுதான் பொருத்தம்.''
வியப்பூட்டும் பிரமிடின் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய்விட்டதாலும், அதன் பயன்கள் மிக பெருமளவில் இருப்பதாலும், பிரமிடாலாஜி என்ற தன பிரமிட்டியலே தோன்றிவிட்டது.பிரமிட் என்சைக்லோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது.அப்படி என்ன மர்மங்கள்?

பிரமிட் கட்டட அமைப்பு

23 இலட்சம் கட்களால் அமைக்கப்பட்டது கிரேட் பிரமிட்.அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டான் முதல் 30 டான் வரையும் இருக்கிறது. இந்த கட்கள் ஒன்றோடொன்று பொருத்தப்பட்டிருப்பது அதிசயிக்க தக்க வகையில் உள்ளது. இவை அரை மில்லிமீற்றர்-அதாவது ஒரு மயிரிழை கூட இடைவெளியின்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே.
இந்த கட்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்.பிரமிட் பூமியின் ஸ்கேல் மொடலாக உள்ளது.
இதனது Latitude மற்றும் Longitute ஆகிய இரண்டும் வெட்டிக்கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு. இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளை விடவும் அதிகமான பூமியின் பரப்பின் வழியே செல்கிறது.என்பது இன்னொரு அதிசயம்.
பிரமிடின் மொத்த கற்களின் எடையான 53 இலட்சம் டான்னை 1,000 ,000 ,000 ,000 ,000 (Ten of the power of 15 ) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது. பிரமிடின் வெவ்வேறு விகிதாசாரங்கள் ஆங்காங்கே பை எனப்படும் 3.142 என்ற அளவையும் தங்க விகிதம் என்று கூறப்படும் ௧.௬௧௮ என்ற அளவையும் காட்டுகின்றன.
பிரமிடிலுள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே பீடா ஓரியன் நட்சத்திரத்தையும் ஆல்பா டிராகோணி நட்சத்திரத்தையும் க்வீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே சீரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன.
பிரமிடினுள்ளே வைத்த பொருட்கள் அழுகுவதில்லை. அதில் முறைப்படி தெற்கு வடக்காக கீழிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் வைக்கப்படும் பிளேடு தானாக சார்ஜாகி எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடியளவு கூர்மையாக இருக்கும்.

அளவுகள் முக்கியம்
பிரமிடின் சக்தியை சோதிக்க விரும்புவோர் அதன் அளவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும். கீழே தந்துள்ள அளவுகளை கவனித்தால் உயரம், அடிப்பக்கம், பக்க அளவு ஆகியவற்றின் விகிதங்கள் தெரிய வரும். பிரமிடின் அளவு விபரம் (அனைத்தும் சென்றிமீற்றரில்)

உயரம், அடிப்பக்கம், பக்க அளவு

5 7.85 7.47

10 15.70 14.94

15 23.56 22.41

20 31.41 29.89

25 39.27 37.36

30 47.12 44.83


இந்த அளவுகளை கவனித்தால் ஒவ்வொரு அலகு உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம்
1 .5708 மடங்காவும் பக்க அளவு 1 .4945 ஆகவும் இருப்பது தெரியவரும்.

நெப்போலியன்

மாவீரனான நெப்போலியன் உலக அதிசயங்களில் மிகவும் தொன்மையான கிரேட் பிரமிடின் முக்கிய உள்ளறையான மெயின் சேம்பரில் ஒரு இரவைக்கழித்தான். காலையில் வெளியே வந்த அவன் பெரும் பிரமிப்புக்குள்ளாகி இருந்தான்.
என்ன நடந்தது என்று கேட்ட போது அதைச்சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் (You wont believe me if i tell u )என்றான்.அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தருவது பிரமிட்.
ஆயிரக்கணக்கான அபூர்வங்களை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் பிரப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும்.பலன்களும் அதே அளவு இருப்பது தான் அதிசயம்.
பிரமிட்டை ஆராயக்கூடிய எவருக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம். நிச்சயமாக இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க முடியவே முடியாது.
பின் யாராக இருக்க முடியும்?
ஜின்களாக இருக்க முடியுமோ என்று தோன்டுகிறதா? ''இருக்கலாம்'' என்று சொல்வதை விட ஆம் என்று சொல்வதுதான் பொருத்தம்.

நன்றி,நிடூர்

கல் மழை - சவூதி அரேபியா