Wednesday, July 7, 2010

பறக்கும் கார்

பிபிசி நேயர் எண்ணிக்கை 24 கோடியாக அதிகரிப்பு


பிபிசியின் உலகச் செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்கின்ற நேயர்களின் வாராந்திர எண்ணிக்கை முன்பில்லாத அளவுக்கு 24 கோடியாக அதிகரித்துள்ளது.
சிற்றலை வரிசை மூலம் பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் எண்ணிக்கையில் 2 கோடி குறைந்துள்ளது என்றாலும்கூட, மொத்த நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் சிற்றலை நேயர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.
பிபிசி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பெறுகின்ற புதிய நேயர்கள் கோடிக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளது இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
பிபிசி செய்திகள் பல வெளிநாடுகளில் உள்ள நேயர்களைச் சென்றடைவதற்கான முக்கிய வழியாக ஒரு காலத்தில் விளங்கியது சிற்றலை வானொலி ஒலிபரப்புகள்தான். ஆனால் தற்போது மக்களிடையே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கின்ற வழக்கம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது.
பிபிசி தனது நிகழ்ச்சிகளை மென்மேலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பிலிருந்து பண்பலை வானொலி ஒலிபரப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இணையதளத்துக்கும் மாற்றி வருகிறது.
இந்த மூன்று வகையான சேவைகளிலும்தான் பிபிசி செய்திகளுக்கான நேயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்று பல வகைகளிலும் செய்திகளை வழங்குவது என்ற பிபிசியின் உத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதை இந்த நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக பிபிசியின் உலகளாவிய செய்திச் சேவைகள் பிரிவுகான இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக சேவையை நடத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை பிபிசி நிறுவனத்தார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
பெரிய அளவில் செலவுக் குறைப்புகளை அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியுள்ள நிலையில், பிபிசி உலக சேவைக்கான நிதியைப் பெறுவதில் வெளியுறவுத் துறையுடன் பிபிசி நிறுவனத்தார் அதிகம் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks To..Alaikal

கிரிக்கெட் சாதனை வீரர் முரளிதரன் ஓய்வு பெறுகிறார்


இலங்கை அணியின் கிரிக்கெட் சாதனை வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் 132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் முரளிதரன். இவர் இந்தியாவுக்கு எதிராக ஜூலை 18ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் முழுவதுமாக ஓய்வு பெறப்போவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.
முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, 1972, கண்டியில் பிறந்தார். பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார்.
இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ல் தமிழ்நாடு சென்னையில் மலர் மருத்துவமனை அதிபர் மகள் மதிமலர் ராமானுதியை திருமணம் செய்துகொண்டார்.
Thanks To...Tamilwin

உலகிலேயே மிகப் பெரிய மூக்கு.