Thursday, February 9, 2012

ஒரு பின்லேடனுக்காய்......

 அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் ஓட்டிய விமானங்கள் அடுத்தடுத்து மோதி வெடித்து சிதறின. அதில் கட்டிடங்கள் நொறுங்கி தரைமட்டமாகின. அதில் 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
கடும் பாதுகாப்பு கொண்ட வல்லரசாக உலக நாடுகளால் பிரமிப்புடன் பார்க்கப்பட்ட தனக்கு நேர்ந்த கதிக்கு பின்லேடனை பழிவாங்க அமெரிக்க அரசு உறுதி ஏற்றது. அப்போது முதல் ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட பல பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை வேட்டையாடத் தொடங்கியது.
எனினும், 10 ஆண்டுகள் வரை பின்லேடனை மட்டும் நெருங்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் பின்லேடனை அமெரிக்க படையினர் ஏறக்குறைய நெருங்கி விட்ட நிலையில், தப்ப விட்டனர். அதன் பிறகு மீண்டும் பின்லேடனை பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது. அதற்கான பட்ஜெட்டை அமெரிக்க அரசு தாராளமாக்கியது.
கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் 6,000 அமெரிக்க வீரர்களை பலி கொடுத்து ஒரு பின்லேடனை  அமெரிக்காவால்  கொல்லப் பட்டார். அதற்காக 10 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்ட தொகை  58.5 லட்சம் கோடி. இந்த 10 ஆண்டு போரில் ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் சுமார் 12 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.