Thursday, December 30, 2010

சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி சாதனை

 வைத்திய உலகில் ஆச்சரியம்.
நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த 1,72,155 கற்களை அகற்றி முன்னர் வைத்திய நிபுணர் Nashik என்பவரால், 14,098 சிறு நீரக கற்களை  அகற்றி நிகழ்த்தப்பட்ட பழைய சாதனையை முறியடித்து, மகாராஷ்டிர டாக்டர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ராவன்டாலே பாட்டீல். சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரான இவர் இன்ஸ்டிடியூட் ஆப் யூராலஜி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரிடம் 45 வயதுடைய தன்ராஜ் வாடிலே என்பவர் அடிவயிறு வலிப்பதாக கூறி, சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏராளமான சிறு கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற டாக்டர் பாட்டீல் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி, தன்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, சிறுநீரகத்தில் இருந்து மொத்தம் 1,72,155 சிறிய கற்கள் நான்கு மணி நேர சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டன. இந்த கற்கள் அனைத்தும் நோயாளியின் ஒரு சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சாதனையாக கருதி, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய அனுப்பி வைத்தார் டாக்டர் பாட்டீல். அவரது சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். பாட்டீல்  கூறுகையில், ‘கின்னஸ் சாதனை பதிவு அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’ என்றார்.
மேலதிக தகவலுக்கு.....
http://www.themedguru.com/20101116/newsfeature/indian-doctor-removes-172-155-kidney-stones-single-patient-86141890.html

தென்கொரியா பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் “ரோபோ”க்கள்.

தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில் சுமார் “30 ரோபோக்கள்” இது போன்று ஆங்கிலம் கற்றுத் தருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் ஆசிரியைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.
ஆங்கில பாடம் பிலிப் பைன்ஸ் ஆசிரியைகளின் குரல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இது தங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்ப தாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், குழந்தைகளும் மிகவும் அன்புடனும், ஆர்வமுடனும் ஆங்கில பாடம் கற்கின்றனர். இது போன்று தென்கொரியா முழுவதும் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.வீரகேசரி.

Wednesday, December 29, 2010

சீனாவில் 3D பத்திரிகைகள் அறிமுகம்.

பத்திரிக்கை  உலகின் புது வரவு 3D பத்திரிகை.
ஜேம்ஸ் கமரூனின் அவதார் திரைப்படம் 3D படங்கள் பற்றிய பிரக்ஞையை உலக அரங்கில் வெகுவாக் கிளப்பிவிட்டுள்ளது தெரிந்ததே. இப்போது தொலைக்காட்சிகள் 3D வடிவில் வருகின்றன.
இவற்றில் இருந்து சற்று வேறுபட்டு 3D முப்பரிமாண படங்கள் கொண்ட பத்திரிகைகள் சீனாவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. கடந்த 2009 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில பத்திரிகைகளின் விளம்பரங்கள் முப்பரிமாணத்தில் வருகின்றன. இவற்றைப் பார்ப்பதற்கான கண்ணாடிகளும் பத்திரிகையுடன் சேர்த்தே வழங்கப்படுகிறது.
சிறுவர்களுக்கான சித்திரக் கதைகள், திரைப்பட விளம்பரங்கள் போன்றன பத்திரிகையில் முப்பரிமாண படங்களாக வர ஆரம்பித்திருப்பது பத்திரிகைத் துறைக்கு புதிய பரிமாணத்தையும் விற்பனை வீச்சையும், புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்கிறார்கள் சீனப் பத்திரிகையாளர். இணையத்தின் வரவால் தள்ளாடிய பத்திரிகை, சஞ்சிகைகளின் விற்பனைகள் இனி மறுபடியும் புதுவலு பெற இருக்கின்றன.










Tuesday, December 28, 2010

மணிக்கு 486Km வேகம் கின்னஸ் உலக சாதனை

சீனா மணிக்கு 486Km வேகத்தில் இயங் கும் அதிவேக இரயிலை வடிவமைத்துள்ளது. இந்த இரயில் வெள்ளோட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று விடப்பட்டது.
1,318Km தூரமுள்ள இந்த தூரத்தை இந்த ரெயில் சுமார் 5 மணி நேரத்தில் சென்றடைந்தது. இந்த ரெயில் வருகிற 2012-ம் ஆண்டு முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் ஓடத் தொடங்கும் பட்சத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டி.ஜி.வி. அதிவேக ரெயில் மணிக்கு 574Km வேகத்தில் ஓட்டி வெள்ளோட்டம் நிகழ்த்தப்பட்டது.
2005-ம் ஆண்டு ஜப்பானில் மணிக்கு 581Km வேகத்தில் சோதனை ஓட் டம் நிகழ்த்தப்பட்டது. தற்போது சீனாவின் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டுள்ளது.
வருகிற 2012-ம் ஆண்டு மக்கள் பயணம் செய்யும் வகையில் ஓட்டப்படும். அதற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரெயிலை 2012-ம் ஆண்டில் 13000Km தூரம் இயக்கவும், 2020-ம் ஆண்டில் 16000Km தூரம் இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய நகரங்களுக்கு இடையே ஏற்படும் போக்கு நெரில் குறையும் என்றும் கருதப்படுகிறது.

நீரிலும், நிலத்திலும் சவாரி செய்யும் அதிசய பஸ்.

முதன் முறையாக  மத்திய கிழக்கில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துபாயில்  இந்த நீரிலும் நிலத்திலும் ஓடும் அதிசய பஸ் வண்டி சேவையில் உள்ளது.
ஆசியாவிலே ஜப்பானுக்கு(Osaka) அடுத்ததாக துபாய் இந்தப்பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
44 இருக்கைகள் கொண்ட இந்த அதிசய பஸ் வண்டி அழகான உள்ளக அலங்கார வடிவமைப்பு, குளிரூட்டி, உள்ளக குளியலறை, ஒலியமைப்பு, தொலைகாட்சி போன்ற வசதிகளைக் கொண்டமைந்த உலகின் ஒரேயொரு பஸ் வண்டியாகும். 
Burjuman Center லிருந்து தனது இரண்டு மணித்தியால பிரயாணத்தை ஆரம்பிக்கும் இந்த இந்த நில, நீர் சவாரி  Sheikh Khalifa Road, - Sheikh Rashid Road, - Al Wafi Bridge, - Wafi City Center, -Al Boom Restaurant ஊடாக 1.15 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து, திரும்பி Dubai Court ஐ ஊடறுத்து , Al Maktoom Bridge, - Sheikh Maryam Palace - Seef Road near British Embassy -வழியாக, மீண்டும் Sheikh Khalifa Road ஊடாக Burjuman Centre ஐ அடையும்.
இதில் பயணம் செய்யும்  சுற்றுலா பிரயாண வழிகாட்டி அரபி, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக விளங்கப்படுத்துவது சிறப்பம்சமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த சவாரி இடம்பெறுகின்றது.












Saturday, December 25, 2010

Wave Tower - Dubai







Location: Dubai
 
Designed: Spanish Architects.
 
Height: 92 floors, 370 meters

Materials: Double skin façade made of silk screened glass for solar control.


Uses: Mixed use (commercial, offices and high end residential).


Project status: Proposed

Friday, December 24, 2010

உலகின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப பூங்கா

Dubai Internet City

அபூதாபிக்கும் துபாய்க்குகிடையில் Sheikh Zayed வீதியில்   துபாய் நகருக்கு தெற்கே சுமார் 25 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ளது.
இது, துபாய் மரீனா, ஜுமேயரா கடற்கரை பாம் ஜுமேயரா ஆகியவற்றுக்கு சமீபமாகவும், கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
துபாய் அரசாங்கத்தால் கடந்த 2000 ம் ஆண்டு ஒக்டோபரில்  உலகின் முக்கிய நிறுவனங்களுக்காக சுதந்திர வர்த்தக வலயமாக Dubai Internet City உருவாக்கப்பட்டது.
தற்போது, Dubai Internet City அரை மில்லியன் சதுர அடி மீற்றர் பரப்பில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களைக்கொண்டு 850க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன.

முக்கிய  நிறுவனங்களின் படங்கள் கீழே.....

Dubai Internet City

Dubai Internet City

Seimens

Oracle

Microsoft

IBM

HSBC

DELL

DELL

Cannon

3M

Hollyday Inn

Sony Ericsson



Wednesday, December 22, 2010

உலகின்  மிக நீண்ட இரயில்

ஆஸ்திரேலியாவின் BHP இரும்புத்தாது இரயில் தான் உலகின் மிக நீண்ட இரயிலாகும்.
இது கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
இச்சாதனை ஜூன் 21, 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூமன் (Newman) க்கும் போர்ட் ஹெட்லேன்ட்(Port Headland) க்கும் இடையில் 275Km (170 Miles) தூரத்தை, சுமார் 100000 தொன்(Ton) நிறையுடைய  8 GE AC6000 இரயில் என்ஜின் 82,262 தொன் இரும்புத்தாது ஏற்றப்பட்ட 682 பெட்டிகளைக் கொண்ட 7.353 km (4.568 miles) நீளமுடைய இரயிலை இழுத்து சென்றது.
இந்த முழு நீள இரயிலையும் ஒரே ஒரு சாரதியே செலுத்தியதுடன், இது தற்போதும் சேவையில் ஈடுபடுகின்றமை சிறப்பம்சமாகும்.

Tuesday, December 21, 2010

 உலகின் மிக ஆபத்தான பறவை

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் "உலகின் மிக ஆபத்தான பறவை" யாக இடம் பிடித்துள்ளது.
விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.
இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன.
உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.