Thursday, March 8, 2012

உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம்

பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?
  
ம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
 
து மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

 லகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!  
 கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

துமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம், நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.
த்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது  

பார்ப்பவைகளை பதிவு செய்யும் கண்ணாடி

முற்காலங்களில் கண் பார்வையில் குறைபாடுடையர்கள்  தான். அதை ஈடு செய்வதற்காக மூக்குக்கண்ணாடிகளை அணிந்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்று கூறிக்கொண்டு அழகுக்காகவும் அணிந்தார்கள். ஆனால் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று இந்த மூக்குக்கண்ணாடிகளையும் மின் சாதனமாக மாற்றிவிட்டார்கள். இதன் அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்ணாடியை அணிந்தவாறு பார்க்கும் காட்சிகள், பொருட்கள் என்பனவற்றை அதில் பொருத்தப்பட்டுள்ள உயர் திறன் கொண்ட வீடியோ கேமரா மூலம் 1080 பிக்சல்களில் பதிவு செய்ய முடியும்.

மேலும், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக காணப்படுவதுடன் 44.1 kHz அதிர்வெண்ணுடன் இயங்கக்கூடிய மைக்ரோபோனும் காணப்படுகின்றது. இன்மூலம் 720PT பிக்சல் அல்லது 1080PT பிக்சலில் பதிவு செய்யப்படும் வீடியோவானது செக்கன்டுக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் பதிவாகுவதுடன் 720PT பிக்சலில் பதிவு செய்யும் போது செக்கன்டுக்கு 60PT பிரேம்கள் என்று மாற்றக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

குழந்தைகளுக்கு உதடு பிளவா - இலவச சிகிச்சை



பிறக்கும் குழந்தைகளிடம் உதடும் மூக்கும் சேர்ந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை cleft lip and cleft palate problem என்பார்கள். 
உதட்டில் இப்படியான பிளவுடன் ஆண்டுதோறும், இந்தியாவில், சுமார் 35,000 குழந்தைகள் வரை பிறப்பதாக சமீபத்திய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியறிக்கை தெரிவிக்கின்றது. 

குழந்தைகள் வளர வளர உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

தற்போது இதற்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகின்றது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை. SMILE TRAIN என்ற அமைப்புடன் இணைந்து இதனை மேற்கொள்கின்றது. குழந்தையுடன் ஓரிரு ஆட்கள் தங்கலாம். மருத்துவ செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் எதுவும் கிடையாது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தன் தந்தைக்கு சிகிச்சை பார்த்து வரும் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்கள் இதனை கூறி மற்றவர்களுக்கு தெரிவிக்க சொன்னார். நாங்களும் இதுக்குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறையை தொடர்புக்கொண்டு மேலே கூறியவற்றை விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டோம்.

நீங்கள் அறிந்தவர்களின் குழந்தைகள் இப்படியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடர்புக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருமுறை நன்றாக விசாரித்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்தவர்களுக்கு இதுக்குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளின் உளவியல்ரீதியான பாதிப்புகளை களைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய:

Meenakshi Mission Hospital & Research Centre
Lake Area, melur Road,
Madurai, Tamil Nadu,
India - 625 107.
Phone: 0452-4263000

மற்றும் SMILE TRAIN அமைப்பு குறித்து பார்க்க: http://www.smiletrain.org

நன்றி: சகோதரர் ஆஷிக் அஹ்மத். (எதிர்க்குரல்).....