Wednesday, June 30, 2010

உலகக் கோப்பை கால்பந்து : காலிறுதியில் 8 அணிகள்

தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன.இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் ஜப்பான் - பராகுவே அணிகள் மோதின. ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இருஅணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. அதனால் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் 'பெனால்டிக் கிக்' தரப்பட்டது. இதில் ஜப்பான் வீரர் ஒருவர் கோல் அடிக்கத் தவறியதால் பராகுவே 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
நள்ளிரவு நடைபெற்ற ஸ்பெயின் - போர்ச்சுகல் இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்துடன் நாக்-அவுட் சுற்றுகள் முடிவுக்கு வந்தன.
இன்றும் நாளையும் ஓய்வு நாட்கள் என்பதால், நாளை மறுதினம் ஜூலை 2 ஆம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.
காலிறுதியில் மோதும் அணிகளின் விவரம் வருமாறு
பிரேசில் - நெதர்லாந்து
அர்ஜெண்டினா - ஜெர்மனி
உருகுவே - கானா
பராகுவே - ஸ்பெயின் - ஆகிய அணிகள் மோதுகின்றன.
காலிறுதிக்குள் நுழைந்துள்ள அணிகளில் நான்கு நாடுகள் தென் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவை. 3 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து கானா மட்டுமே காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. பராகுவே அணியிடம் ஜப்பான் அணி நேற்று வீழ்ந்தால் ஆசியா கண்டத்தில் இருந்தும் எந்த அணியும் காலிறுதிக்குள் நுழையவில்லை.
Thanks To.......www.lankasrisports.com

காதுகளை மூடித் திறக்கும் அதிசய சிறுவன் _

கண்களை மூடித் திறக்கலாம்; வாயை மூடித் திறக்கலாம்; காதை மூடித் திறக்க முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கின்றான் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன்.
கோவை மாவட்டத்தில் இந்தச் சிறுவனின் அரிய செயலைப் பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட்டின் கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவரது மகன் பிரேம்குமார்(9) என்பவரே இந்த அதிசயத்தைச் செய்து காட்டுகின்றார்.
அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், தன் இரண்டு காதுகளையும் காதுக்குள் சொருகி வைத்து சக மாணவர்களை அசர வைக்கிறார். இரவு நேரத்தில் தூங்கும் போது, இவரது இரண்டு காதுகளும் மூடிய நிலையில் இருக்கும். காலையில் எழுந்ததும் காதுகள் தானாக திறந்து விடும்.
சிறுவன் எப்போது வேண்டுமானாலும் காதை காதுக்குள் சொருகி வைத்துவிட்டு, தன் படிப்பை முழு கவனத்துடன் படிக்கின்றார். தனித்திறமை கொண்ட இவரது செயலை சக மாணவர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பொழுது போக்காக வேடிக்கை பார்க்கின்றனர்.

'ரெப்' இசை மூலம் கணித பாடம் கற்பிக்கும் அமெ. ஆசிரியர்

அமெரிக்காவில் 'ரெப்' இசைமூலம் கணிதபாடம் கற்பிக்கின்றார் ஆசிரியர் ஒருவர்.
லாமார் குயின் (26) என்பவரே இவ்வாறு இசை மூலம் கணித பாடத்தைக் கற்பிக்கின்றார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த இவர் 'ரெப்' இசைப் பாடல்கள் அடங்கிய வீடியோவை திரையில் ஓட விட்டுக் கணித பாடம் நடத்துகிறார்.
கணிதம் பல மாணவர்களுக்குப் பிடிக்காத பாடமாக உள்ளது. குறிப்பாக அதில் உள்ள அல்ஜிப்ரா என்ற பாடப் பிரிவைப் படிக்க மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, அமெரிக்காவில் 'ரெப்' இசை மூலம் அல்ஜிப்ரா கணித பாடத்தை மாணவர்களுக்கு மிக எளிதாக இவர் கற்றுத் தருகிறார்.
இந்தப் பாட திட்டத்தை 8ஆவது வகுப்பு மாணவர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். 'ரெப்' இசை வீடியோ மூலம் பாடம் நடத்துவதால், மாணவர்கள் மிக எளிதாகக் கணிதத்தை புரிந்து கொள்கின்றனர்.
கணித பாடத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த மாணவர்கள் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த முறையில் பாடம் நடத்தும் திட்டம் அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது .
Thanks To....Virakesary

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.
கிறிஸ்துவுக்கு முன் 1664 - 1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆய்வை மேற்கொண்ட, அவுஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.
டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள் , கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.
ஆஸி. ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks To....Virakesari

பேஸ்புக் இல் வேகமாக பரவிவரும் கிளிக் வார்ம் (clickjacking 'Like' worm)

AddThis Social 
Bookmark Button
லட்சக்கனக்கான பேஸ்புக் பயனாளர்களிடையே அவர்களது புரோபைல் மூலமாக ஸ்பாம் மாதிரியான வார்ம் (worm) ஒன்று மிக வேகமாக பரவிவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்னர் இதோ தன்மையில் மற்றொரு வார்ம் பரவியிருந்தாலும் அதை கட்டுபடுத்தி விட்டதாக பேஸ்புக் அறிவித்தது. ஆயினும் தற்போது மீண்டும்
    "LOL This girl gets OWNED after a POLICE OFFICER reads her STATUS MESSAGE."
    "This man takes a picture of himself EVERYDAY for 8 YEARS!!"
    "The Prom Dress That Got This Girl Suspended From School."
    "This Girl Has An Interesting Way Of Eating A Banana, Check It Out!"
என்ற மெஸேஜ்கள் கொண்டு பரவுகின்றது.
மேலுள்ள விடயங்களுடன் காணப்படும் லிங்க்குகளை கிளிக் செய்ததும் வெறும் "Click here to continue" என்ற எழுத்துக்கள் மட்டுமுள்ள பக்கம் ஒன்று திறக்கும் அதன் மீதோ அல்லது அப்பக்கத்தின் எந்த பகுதியில் கிளிக் செய்ததும்  உடனடியாக உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் பேஸ்புக் புரோவைலில் இதே போன்ற மெஸெஜ்களை உடனே பரப்பிவிடுகிறது இந்த வார்ம்.

அண்மையில் பேஸ்புக் புதிதாக லைக் (Like) செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய பின்னரே இவ்வகையான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
மேலுள்ள சொற்கள் கொண்டு வரும் இணைப்புக்கள் மீது கிளிக் செய்யவேண்டாம் என்று பேஸ்புக் தனது பயனாளர்களை கேட்டுள்ளது.
Thanks To.....4Tamilmedia